திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ரஷ்மிகா வேண்டாங்க.. கடுப்பாகி பிரமாண்ட படத்திலிருந்து நீக்கிய சங்கர்

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் தன்னுடைய படத்திலிருந்து ரஷ்மிகா மந்தனாவை தூக்கி வீசிய சம்பவம் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் இன்றைய ட்ரென்டிங் செய்தியாக மாறியுள்ளது.

இந்தியன் 2 பட பஞ்சாயத்துகளுக்கு பிறகு ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

மேலும் சங்கர் மற்றும் ராம் சரண் இணையும் இந்தப் படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் சென்சேஷனல் நடிகை ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்கத்தான் படக்குழுவினர் ஆர்வம் காட்டினார்களாம். ஆனால் ரஷ்மிகா முன்னர் போல் இல்லை என்கிற செய்தி கிடைத்துள்ளது.

சங்கராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி என தன் இஷ்டப்படி சில கண்டிஷன் போட்டுள்ளார் ரஷ்மிகா. அது மட்டுமில்லாமல் மூன்று மொழிகளில் இந்த படம் உருவாவதால் சாதாரணமாக வாங்கும் சம்பளத்தை விட சில கோடிகளை உயர்த்திக் கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான சங்கர், ரஷ்மிகா வேண்டாம் என பாலிவுட் நடிகை பக்கம் சென்றதாக தெரிகிறது. இதன் பிறகுதான் கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சங்கர் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

rashmika-mandanna-cinemapettai
rashmika-mandanna-cinemapettai

Trending News