தமிழ் சினிமாவிற்கு கேடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. மும்பையில் பிறந்த தமன்னா தொடக்கத்தில் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். அதன் விளைவாகவே தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், கார்த்திக்குடன் பையா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, அஜீத்துடன் வீரம் போன்ற படங்களில் தொடர்ந்து வெற்றி கண்டார்.
அதன்பின்பு 2015ஆம் ஆண்டு 600 கோடி வசூலை குவித்த, பாகுபலி படத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இவருக்கு எக்கச்சக்கமான பாராட்டுக்கள் குவிந்தது. இப்படி வெற்றியை ருசித்துக் கொண்டிருந்த தமன்னாவிற்கு,
ஒரு சில வருடங்களாக டாப் ஹீரோக்களுடன் நடித்தும், தமன்னாவின் படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமன்னாவை தேர்வு செய்வதில் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒரு சில பெரிய படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளும் கைநழுவிப் செல்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
தற்போது வெப் சீரியலில் கவனம் செலுத்திவரும் தமன்னாவிற்கு, எதிர்பார்க்கும் அளவு வரவேற்பு கிடைக்கவில்லையாம். மேலும் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பை காட்டினாலும் ஓவர் ஆக்டிங் என்று தமன்னாவை விமர்சிக்கின்றனர்.
இதனால் புதுப்படங்களில் அறிமுக நடிகைகளுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் கொடுக்கப்படும் வாய்ப்புகள் கூட தனக்கு மறுக்கப்படுகிறது என்று புலம்பித் தவிக்கிறார் தமன்னா. சினிமாவில் தன்னுடைய நடிப்பை அங்கீகரிக்கும் விதத்தில், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விருதுகளும் கிடைக்கவில்லை.
இருப்பினும் தனக்கு பிடித்தமான வேலையை செய்வதில் தமன்னா அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபர் ஆவார். எனவே தமன்னா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படமான ‘பெண் ஒன்று கண்டேன்’ என்ற படம் விரைவில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.