வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஞ்சு மடங்கு லாபம் கொடுத்தும் அமீரை ஏன் திட்றாங்க தெரியுமா.? பருத்திவீரன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Paruthiveeran Box office Collection: தற்போது சோசியல் மீடியா அனைவரது கையிலும் இருப்பதால் எந்த ஒரு விஷயமும் ஈஸியாக பரவி விடுகிறது. அதனாலையே சினிமாவில் உள்ள பழைய குப்பைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டே இருக்கிறது. 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விஷயம் தற்போது சர்ச்சையாகி வருகிறது. அதாவது சமீபத்தில் அமீர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் சூர்யாக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டு சில விஷயங்களை கிளறி இருக்கிறது.

இதில் அமீர் ஆவேசமாக பேசி கார்த்திக் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இந்த ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் பரவியதால் பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர் பக்கத்தில் இருக்கும் சில நியாயங்களை பேசிக் கொண்டு வருகிறார். அதாவது கார்த்திக் ஹீரோவாக அறிமுகமான படம் பருத்திவீரன். இப்படத்தை 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கினார்.

அந்த நேரத்தில் இப்படத்தின் பட்ஜெட் 4 கோடியை 80 லட்சம். ஆனால் இப்படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 25 கோடியை பெற்றிருக்கிறது. 16 வருடங்களுக்கு முன் என்றால் 25 கோடி என்பது மிகப்பெரிய விஷயம் தான். இதில் கார்த்திக்கின் சம்பளம் 15 லட்சம். மேலும் ஆறு மாசத்திற்கு முடிக்க வேண்டிய படத்தை 2 வருஷமாக இழுத்தடித்து கள்ளக் கணக்குகளை காட்டி அதிகமாக பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார்.

Also read: அதல பாதாளத்திற்கு சென்ற கார்த்தி.. அந்தப் பட லிஸ்டில் இணைந்த ஜப்பான்

அத்துடன் 2,78,000 அடி பிலிம் ரோல் எக்ஸ்ட்ரா ஆக்கி இருக்கிறார். இதுல நான்கு படங்கள் கிட்டத்தட்ட எடுத்து முடித்து இருக்கலாம். அது மட்டும் அல்லாமல் இரண்டு கோடியில் முடிக்க வேண்டிய படத்தை நஷ்டம் வரும்படி செலவை இழுத்து இழுத்து விட்டு இருக்கிறார் என்று அமீர் மீது ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.

அத்துடன் இதில் காட்டப்பட்ட பன்னிகளின் எண்ணிக்கை என்னமோ கம்மிதான். ஆனால் 200க்கும் மேற்பட்ட பன்னிகளை கணக்கில் காட்டி பணத்தை சுருட்டி இருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் தெரிந்த பிறகு தான் அமீர்க்கும், சிவகுமார் குடும்பத்திற்கும் விரிசலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் இவர் பண்ண தில்லாலங்கடி வேலைக்கு இப்ப வரை கோர்ட் கேஸ் என்று அலைந்து கொண்டு வருகிறார்.

அதன் பின்னே இவர் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லாததால் எந்த தயாரிப்பாளரும் படத்தை தயாரிப்பதற்கு முன் வரவில்லை. மேலும் கார்த்தியின் முதல் படம் என்பதால் அந்த நேரத்தில் கண்மூடித்தனமாக அனைவரும் அமீரை நம்பி விட்டார்கள். அசர்கிற நேரத்துல ஆட்டைய போடணும் என்பதற்கே ஏற்ற மாதிரி அமீர் அவருடைய கைவரிசையை காட்டி இருக்கிறார்.

Also read: Japan Movie Review – கார்த்தியின் 25வது படம், ஜப்பான் எப்படி இருக்கு.? முழு விமர்சனத்தை கேட்டு அதிரும் இணையவாசிகள்

Trending News