புதன்கிழமை, நவம்பர் 20, 2024

சஞ்சு சாம்சனை விட நான் மோசமா.? ஆதங்கத்தைக் கொட்டி அணியை விட்டு விலகிய அதிரடி கீப்பர்

நல்ல பார்மில் இருந்தும் கூட இந்திய அணியில் சில வீரர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஒன்று இரண்டு போட்டிகளில் சரியாக பெர்பார்ம் பண்ணவில்லை என்றால் கூட அணியில் இருந்து ஒரேடியாக ஓரங்கட்டப்படுகிறார்கள். இப்பொழுது இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்வதில் ஏகப்பட்ட காம்படிஷன்.

இந்திய அணிக்கு டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டிகள் என தனித்தனியான வீரர்களை தேர்வு செய்கிறார்கள். விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, போன்ற சீனியர் வீரர்கள், இளம் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

நட்சத்திர வீரர் கே எல் ராகுல் கூட 20 ஓவர் போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். பார்மில் இல்லாத சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு காலத்தில் தொடர்ந்து அருமையாக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மேன் ஆன இசான் கிசானுக்கு தற்போது வரை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

ஆதங்கத்தைக் கொட்டி அணியை விட்டு விலகிய அதிரடி கீப்பர்

இசான் கிசான் 27 ஒருநாள் போட்டியில் 42.40 என்ற சராசரியுடன் 933 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சென்சுரி மற்றும் 7 அரை செஞ்சுரிகளும் அடங்கும். அவரின் அதிகபட்ச ஒரு நாள் போட்டியின் ரன்கள் 210. இப்படி நன்றாக விளையாடிய போதிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த இசான் கிசான் அணியின் இடம் கிடைக்காததால் மனச்சோர்வில் இருப்பதாக கூறி அணியை விட்டு வெளியேறினார். இப்பொழுது தன்னுடைய மாநில அணி ஜார்ஜ்கண்டுகாக திருநெல்வேலியில் நடக்கும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டியில் அசத்தி வருகிறார். அதிரடி சதமும் அடித்துள்ளார். சஞ்சு சாம்சனுக்கு கொடுத்த வாய்ப்பு கூட தனக்கு கொடுக்கவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News