செம்ம மாஸ் ஆன தயாரிப்பில், டாப் ஹீரோவின் படத்தில் கிடைத்த டைரக்சன் வாய்ப்பை அசடு மாதிரி விட்டுட்டு இப்படி நிக்கிறியே! என்று காதல் கணவரான டைரக்டர் மீது நடிகை மனைவி செம காண்டில் இருக்கிறார். ஏனென்றால் லட்டு மாதிரி கிடைத்த ப்ராஜெக்டை கை நழுவு விட்டு விட்டது அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
அந்தப் படத்தை இயக்குவதற்காக ரூபாய் 8 கோடியை தயாரிப்பு நிறுவனம் தூக்கிக் கொடுத்தது. காரணம் மாஸ் ஆக்டர் மீதும், நடிகை மனைவி மீதும் தயாரிப்பு நிறுவனம் வைத்த அபரிவிதமான நம்பிக்கை தான். ஆனால் அந்த நம்பிக்கையை எல்லாம் கெடுத்து விட்டு, சரியான கதையை தயார் செய்யாமல் அசால்டாக இருந்த காதல் கணவரை மனைவி கழுவி கழுவி ஊற்றுகிறார்.
Also Read: மனைவியின் சேட்டையை பார்த்து கடுப்பான கணவன்.. புது சகவாசத்தால் போடும் கெட்ட ஆட்டம்
மாஸ் நடிகருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சொன்ன கதையை ஒழுங்குபடுத்தவோ, அவர்களுடன் நடத்தப்பட்ட டிஸ்கசனின் போது ஒரு குப்பை கதையை கையில் வைத்து கொண்டு தான் ஃப்லிம் காட்டி இருக்காராம். இதனால் மாஸ் நடிகரும் தயாரிப்பு நிறுவனமும் ஒரு கட்டம் வரை ரொம்பவே பொறுமையாக இருந்திருக்கிறது.
அதற்கு நடிகை மனைவி மீதான மார்க்கெட் மரியாதையும் ஒரு காரணம். பொறுத்து பொறுத்து பார்த்த பின்பு திடீரென்று அந்த மாஸ் நடிகர் கதை பிடிக்கவில்லை என மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லிவிட்டார். அதன் பிறகு வேறு டைரக்டரையும் அவர் தேர்வு செய்து விட்டார்.
Also Read: அடுத்தடுத்த தோல்வியால் தொழிலையே மாற்றிய நடிகை.. தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்
இருப்பினும் காதல் மனைவியை வைத்து அவர்களை சமாதானப்படுத்த நினைத்தாலும் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. இதனால் லட்டு மாதிரி கிடைத்த 250 கோடி ப்ராஜெக்டை அம்பேல், வெளியில தலை காட்ட முடியல. வரும் போன் காலுக்கு பதில் சொல்லி மாள முடியவில்லை என்றும் காதல் மனைவி புலம்புகிறார். ஒரு கட்டத்தில் டைரக்டர் கணவர் மீது தடிக்கும் வார்த்தைகளாலும் திட்டுவதாக அரசல் புரசலாக செய்தி வெளியானது.