வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கார் ரேஸில் கப் அடிப்பாரா அஜித்? அஜித்துக்கு வாழ்த்துகள் கூறிய துணை முதல்வர் உதயநிதி

தமிழகத் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜித்குமாருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

சினிமாவில் தனெக்கென தனி ஸ்டைல் மற்றும் அலட்டிக் கொள்ளாத மனப்பான்மை கொண்டவர் அஜித்குமார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். விஜய்யும் அஜித்தும் போட்டியாளர்கள் என்றாலும் இருவருக்குமே அவர்களின் பட ஓபனிங்கில் பெரும் வரவேற்பும் பிசினஸும் இருக்கிறது. அதனால் அவர்களின் ஒவ்வொரு செயலும், மீடியாலும், சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகிறது.

அந்தவகையில் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா தயாரித்துள்ளது. வரும் பொங்களுக்கு இப்படம் ரிலீசாகும் என தெரிகிறது. அதேபோல், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கார் ரேசில் பங்கேற்றுள்ள அஜித்குமார்

இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இதற்கு பிரேக் கொடுத்துவிட்டு, நடிகர் அஜித்குமார் கார் ரேசிங்கில் கலந்து கொண்டுள்ளார். அதாவது. கார், பைக் ரேசிங் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட அஜித்குமர், உலகளவில் புகழ்பெற்ற 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class என்ற கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.

ajith-

சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமார் தன் கேரியரில் சக போட்டியாளருக்கு டப் கொடுக்க நினைக்கும் மனப்பான்மையில் இல்லாமல் தான் விருப்பப்படும் கார் ரேஸில் பங்கேற்றுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. இதற்கு இளைஞர்கள், மாணவர்களுக்கு, விளையாடு வீரர்களுக்கு பெரும் உந்துததாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் அஜித்குமார் உலகளவிலான கார் ரேஸில் பங்கேற்றதற்கும், தமிழக அரசின் விளையாட்டு லோகோவை பயன்படுத்தியதற்கும் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அஜித்துக்கு நன்றி கூறி வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி

இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

’’உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ajith car race
நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் – #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.

ajithkumar car race
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் விஜய் திமுகவுக்கு எதிராக பேசி விமர்சித்த நிலையில், அவரது போட்டியாளரான அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளது சினிமா வட்டாரத்திலும் அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும், அஜித்குமார் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், அஜித்குமார் ரேசிங் என்ற யூனிட்டின் சார்பில் இந்த கார் ரேசிங்கில் தன் அணியுடன் அவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இந்த அணியின் அதிகாரப்பூர்வ சான்றிதல் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

ajith

- Advertisement -spot_img

Trending News