புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தண்ணியில் தத்தளிக்குமா பிக் பாஸ் வீடு.? ஆரம்பமே அமர்க்களம் தான்

Bigg Boss : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் தான் நிறைவு பெற்றிருக்கிறது. கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் பலருக்கும் பிடித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி எவ்வாறு இந்நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.

கமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினால், விஜய் சேதுபதி நேரடியாகவே போட்டியாளர்கள் இடம் சரமாரியான கேள்விகளை கேட்கிறார். இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இந்த சூழலில் இப்போது சென்னையில் ரெட் அலர்ட் விட்டிருக்கிறார்கள்.

நாளை அக்டோபர் 15ல் இருந்து 18 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். அதோடு ஐடி நிறுவனங்கள் வீட்டிலேயே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள்.

மழையால் பாதிக்குமா பிக் பாஸ் வீடு

இந்த சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடந்தபோது கனமழை காரணமாக போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹோட்டலில் தங்க வைத்தனர். அதாவது பிக் பாஸ் செட் செம்பரம்பாக்கத்தில் தான் அமைந்துள்ளது.

கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் பூந்தமல்லியில் உள்ள ஓட்டலில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கி இருந்தனர். இப்போது சென்னையில் அதீத மழை இருக்கும் என்று கூறியதால் இந்த முறையும் பிக் பாஸ் போட்டியாளர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக போட்டியாளர்கள் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். ஒருவேளை வெள்ள அபாய எச்சரிக்கை வந்தால் உடனடியாக போட்டியாளர்கள் ஹோட்டலுக்கு மாற்றப்படுவார்கள். பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமே மழையால் அமர்க்களமாக போகிறது ‌

Trending News