சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கமல், விக்ரம், சிவாஜி அளவுக்கு தாக்குப் பிடிப்பாரா சூர்யா? வெறித்தனமாக இறங்கும் சிவாவின் படக்குழு

நடிப்பு அரக்கனாக மாறிக்கொண்டிருக்கும் சூர்யா, சமீபத்தில் விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தால் இவரது மார்க்கெட் எகிறி உள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் அஸ்தானை இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கும் சூர்யாவின் 42-வது படத்தைக் குறித்து பல சுவாரசியமான தகவலை தெரிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் க்ரியேஷன் நிறுவனமும் இணைந்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக கெட்ட போட்ட கமல், விக்ரம், சிவாஜி மிஞ்சும் அளவுக்கு சூர்யா 13 கெட்டப் போடுகிறார்.

Also Read: வணங்கான் கைவிட்டாலும் சூர்யா அடுத்தடுத்து கமிட்டான 5 படங்கள்.. சமரசமாக முடிந்த அருவா மோதல்

இதற்காக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அடுத்த 45 நாட்கள் படக்குழுவினர் இரவு பகலாக கேரளாவில் சூட்டிங் நடத்த வெறித்தனமாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் இந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரே சமயத்தில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்த படம் 3டி முறையில் உருவாகும் சரித்திர திரைப்படம் ஆகும். இசையமைப்பாளராக ஸ்ரீதேவி பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதில் சூர்யா மட்டும் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என 5 கதாபாத்திரங்களில், 13 வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க உள்ளார்.

Also Read: அந்த ஒரு விஷயத்தில் சூர்யாவை அடிச்சுக்க ஆளே இல்ல.. அடுத்து உடைய போகும் அஜித், விஜய்யின் மார்க்கெட்

மேலும் இது பேண்டசி கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் படம் 1000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நடக்கும் கதைகளையும் கொண்டு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே வெற்றிக்காக பக்கா பிளான் போட்டு சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூர்யா 42 பட குழு பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அத்துடன் சூர்யாவும் இந்த படத்திற்காக 13 கெட்ட போடுவது வொர்க் அவுட் ஆகுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: 10 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் சூர்யா-42.. இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் கொடுத்த இயக்குனர்

Trending News