ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

69வது தேசிய விருது சூர்யா மகுடம் சூடுவாரா.? டஃப் கொடுத்திருக்கும் ரெண்டு டாப் ஹீரோக்கள்

69th National Film Awards: கடந்த ஆண்டு 68வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா, சூரரைப்போற்று படத்திற்காக வென்றார். இந்தப் படத்திற்கு மட்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை என 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்காக 69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், இந்த முறையும் சூர்யா மகுடம் சூடுவாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த முறை சிம்பு, தனுஷ் ஆகிய இரண்டு ஹீரோக்கள் சூர்யாவிற்கு பயங்கர டஃப் கொடுத்துள்ளனர்.

Also Read: ஹீரோக்களின் வெற்றிக்கு சப்போர்ட்டாக இருக்கும் 5 பிரபலங்கள்.. தண்ணி வண்டியாக கம்பெனி கொடுத்த ஏஜென்ட் உப்பிலி

2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களை பொருத்தவரை தனுஷின் கர்ணன், சூர்யாவின் ஜெய் பீம், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சமுத்திரக்கனி இயக்கி நடித்த வினோதய சித்தம், சிம்புவின் மாநாடு ஆகிய படங்களுக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக சூர்யாவின் ஜெய் பீம் படத்திற்கு போட்டியாக தனுஷின் கர்ணன் மற்றும் சிம்புவின் மாநாடு திரைப்படங்கள் இருக்கிறது. இதனால் இந்த முறை சூர்யா சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவாரா அல்லது சிம்பு, தனுஷ் இருவரும் ஒருவருக்கு அந்த விருது கிடைக்குமாஎன்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது.. வள்ளல்களாய் மாறிய 5 சினிமா நட்சத்திரங்கள்

அதே சமயம் சிறந்த பின்னணி இசைக்கான விருது மாஸ்டர் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அனிருத்துக்கு கிடைக்கும் என்றும் யூகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் தேசிய விருதுகளை வரிசையாக தட்டி தூக்கி ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்த ஆண்டும் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

அதேபோல் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் இந்த முறை த.செ. ஞானவேல், பா. ரஞ்சித்,  மாரி செல்வராஜ் உள்ளிட்டோரிடையே பயங்கரமான போட்டி நிலவி வருகிறது. இவர்களுக்குள் யாருக்கு கிடைக்கும் என்பது இன்று தெரிந்து விடும். டெல்லியில் 69வது தேசிய திரைப்பட விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெற போகிறது, இதனால் திரையுலகமே தற்போது பெரும் பரபரப்புடன் இருக்கிறது.

Also Read: நடிகைகளை தொடாமல், புகை பிடிக்காமல் நடித்த ஐந்து 80ஸ் ஹீரோக்கள்.. அவரைப் பார்த்து கத்துக்கோங்க ரோலக்ஸ்

Trending News