புதன்கிழமை, நவம்பர் 13, 2024

இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாட வரலீனா என்னவாகும் தெரியுமா? முன்னாள் வீரர் மிரட்டல்

பாகிஸ்தானுக்கு வந்து இந்திய அணி விளையாடவில்லை என்றால் டெஸ்ட் டிராபி தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று முன்னாள் வீரர் மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்., பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல அணிகள் உள்ளனர். மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்தியா பாகிஸ்தானுக்கு ஏன் வந்து விளையாடுவதில்லை என்று பல ஆண்டுகளாக அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் அமைப்பும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்தியா, பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகள் என்றால் இலங்கை, அல்லது துபாயில் நடத்தும்படி கோரிக்கை வைக்கிறது பிசிசிஐ. அதன்படி, அப்போட்டிகளும் நடந்து வருகிறது. ஆனால் இந்தியா ஏன் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவதில்லை? என முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனவே இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் நடந்து பல ஆண்டுகளாகும் நிலையில், இந்திய அணி, பாகிஸ்தானுக்குப் பயணிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை.

இவ்விரு அணிகளும் ஐசிசி தொடர்கள், சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இந்த நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச்சில் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தொடர் நடக்கும் நிலையில் ரசிகர்கள் இடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், இந்திய அணி பங்கேற்குமா? இல்லை வேறு நாட்டில் தொடரை நடத்த இந்தியா பரிந்துரைக்குமா என கேள்வி எழுந்த நிலையில், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் ஹைபிரிட் மாடலில் துபாய் அல்லது ஷார்ஜாவின் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணிவீரர்கள் பாகிஸ்தானுக்கு வரலீனா – ரஷித் லடிஃப்

இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணிவீரர்கள் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் பாகிஸ்தான் அணி அத்தொடரைப் புறக்கணிக்கும் என்று முன்னாள் வீரர் ரஷித் லடிஃப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ’’இது ஐசிசி தொடர். 2024 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டுவரை ஐசிசி தொடர்களில் அனைத்து அணிகளும் பங்கேற்கும் என கையெழுத்திட்டுள்ளன. அதனால் அனைத்து அணிகளும் பங்கேற்கும் என நம்பிக்கை அளித்துள்ளன.

ஸ்பான்சர்கள் ஒப்பந்தமும் முடிந்துள்ளன. இந்த நிலையில், இந்திய அணி இங்கு வருவதற்கு பாதுகாப்பை மட்டும்தான் காரணமாக கூறுகிறது. ஆனால், ஆஸ்., தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் இங்கு வருகின்றன.

டிராபி தொடரில் பங்கேற்க மாட்டோம்

பாகிஸ்தான் அரசு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துவிட்டால் யாருமே ஐசிசி தொடரை பார்க்க முடியாது ’’என்று தெரிவித்துள்ளார். இரு நாடுகள் இடையிலான தொடர்களில் விளையாட மாட்டோம் என கூறி பிசிசிஐக்கு உரிமையுண்டு.

ஐசிசி தொடர்களில் அப்படி அல்ல. எனவே டிராபி தொடரில் பங்கேற்க இந்தியா இங்கு வரவில்லை என்றால் பாகிஸ்தான் தொடரை புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News