வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நாக சைத்தன்யா, கீர்த்தி செட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் கஸ்டடி இன்று வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் இயக்குனராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.
அதனாலேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. அதை இப்படம் பூர்த்தி செய்ததா, இல்லையா என்பதை இங்கு ஒரு விமர்சனத்தின் மூலமாக காண்போம். 90களின் பிற்பகுதியில் நடக்கும் கதையாக தான் இப்படம் விரிகிறது. சாதாரண கான்ஸ்டபிள் ஆக இருக்கும் நாக சைத்தன்யா ஆம்புலன்ஸ் செல்வதற்காக முதல்வரின் வண்டியை நிறுத்தி விடுகிறார்.
Also read: வெங்கட் பிரபு – நாக சைத்தன்யா கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா.? கஸ்டடி ட்விட்டர் விமர்சனம்
அதிலிருந்து பிரபலமடையும் இவர் சிபிஐ அதிகாரியுடன் சேர்ந்து குற்றவாளியான அரவிந்த்சாமிக்கு தண்டனை வாங்கித் தர முயற்சிக்கிறார். ஆனால் அவரை காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கத்தினர் முயற்சி செய்கின்றனர். அதை தொடர்ந்து ஹீரோவுக்கும் ஏகப்பட்ட குடைச்சல்கள் வருகிறது. ஆனால் இறுதியில் அரவிந்த் சாமியை கொல்வதற்கு மேல் தரப்பு முயற்சிக்கிறது.
இது எதற்காக நடக்கிறது, அரவிந்த்சாமி என்ன செய்தார், நாக சைத்தன்யா தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பது தான் இப்படத்தின் முழு கதை. தெலுங்கு ரசிகர்களுக்கேற்ப படத்தில் பல மசாலா விஷயங்கள் இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. ஏனென்றால் படத்தின் முதல் 45 நிமிடங்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் நகர்கிறது.
Also read: ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும்.. வெங்கட் பிரபுவின் கஸ்டடி ஆட்டம் ஆரம்பம்
அதிலும் தெலுங்கு படம் தான் பார்க்கிறோமோ என்ற ஒரு உணர்வையும் ரசிகர்களுக்கு கொடுத்து விடுகிறது. சரி இதற்கு மேலாவது படம் விறுவிறுப்பாக இருக்கும் என்று பார்த்தால் முதல் பாதி முழுவதுமே கொஞ்சம் போராக தான் இருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியில் சில விஷயங்கள் மட்டுமே விறுவிறுப்பாக செல்கிறது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த வெங்கட் பிரபுவின் மேஜிக் இதில் கொஞ்சம் குறைவு தான். மேலும் பாடல்களும் அவ்வளவு சிறப்பாக மனதில் பதியவில்லை. ஆக்சன் காட்சிகளும், பின்னணி இசை மட்டுமே ஓரளவுக்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது. இப்படி சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்கள் வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள். ஆனாலும் கஸ்டடி ஆடியன்ஸை பொருத்தவரையில் கஷ்டம் D யாக தான் இருக்கிறது.
Also read: உங்க பக்கம் தல வெச்சி படுக்க மாட்டேன்.. ரிலீசுக்கு முன்பே வசூலான கஸ்டடி படத்தின் கலெக்சன்