திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தீயாய் பரவும் தளபதி விஜய்யின் கடைசி பட அப்டேட்.. அடக்க முடியாமல் சிரிக்கும் வெற்றிமாறன்

Thalapathy Vijay last film Update: இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுவது விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தைக் குறித்து தான். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்குவதாக இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சில வருடத்திற்கு சினிமாவை விட்டு விலகி அரசியலில் தீவிரமாக ஈடுபட போகிறார் விஜய்.

இதற்காக அவருடைய கட்சிக்கும் ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டு, வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் நிற்கப் போகிறார்.  இதனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக அவரது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாக சோசியல் மீடியாவில் அடித்து செல்கின்றனர். ஆனால் இதை கேட்டதும் வெற்றிமாறனுக்கு சிரிப்பு அடக்கவே முடியவில்லையாம். தளபதி 68 படத்தை வெற்றிமாறன் இயக்குவதற்கு 1% சதவீத சான்ஸ் கூட இல்லை. ஏனென்றால் அவர் விடுதலை 2, வாடிவாசல் மட்டுமல்ல அஜித் படத்தையும் கையில் வைத்திருக்கிறார்.

Also Read: எம்ஜிஆர் – விஜய் அரசியலில் இருக்கும் வித்தியாசம்.. ஆழம் பார்த்து காலை விட்ட மக்கள் திலகம், அகலக்கால் வைக்கும் தளபதி

விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன் தான் இயக்குகிறாரா?

இதற்கிடையில் எப்படி விஜய்யின் படத்தை இயக்க முடியும்னு சொல்லி சிரித்திருக்கிறார். இது ஒரு வேலை என்று ட்விட்டரில் இந்த பொய்யான தகவலை டிரெண்டாக்குவது யார் என்று இப்போது தேடி வருகிறார்கள். மேலும் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ்  இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த லிஸ்டில் ஷங்கர், ஹெச் வினோத் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகிறது. ஆனால் வெற்றிமாறன் தளபதி 69 படத்தில்  இணைய வாய்ப்பே இல்லை என்ற உறுதியான தகவல் கிடைத்துள்ளது. விரைவில் தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: ஊழலை பற்றி விஜய் பேசலாமா.? வருமான வரி கதையை அவிழ்த்து விட்ட சர்ச்சை இயக்குனர்

Trending News