செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆட்டத்தில் விக்னேஷ் சிவன் இருக்காரா இல்லையா.? மொத்தமா குழம்பிப் போயிருக்கும் கோடம்பாக்கம்

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் மெகா ஹிட்டான நிலையில், பல நாட்கள் எதிர்பார்த்திருந்த ஏகே62 படத்தில் நடிக்க அஜித் ஆயத்தமானார். இதனிடையே இப்படத்தின் அப்டேட் கடந்தாண்டு வெளியான நிலையில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அஜித்திற்கு விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் ஏ.கே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஏகே62 படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனம் தெரிவிக்காத நிலையில், விக்னேஷ் சிவன் போட்ட ஒரு லைக்கால் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏகே62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி, விஷ்ணுவர்தன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிப்பட்டது.

Also Read: அஜித்திற்கு கதை சொன்ன பிரம்மாண்ட இயக்குனர்.. போட்டிக்கு வந்த சூப்பர் ஹிட் டைரக்டர்

இதில் மகிழ் திருமேனி தான் 90 சதவிகிதம் ஏகே62 படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான காரணம் உதயநிதியின் சிபாரிசு தான் என அண்மையில் செய்திகள் வெளியானது. மகிழ் திருமேனியும், அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திடம் கதையை கூறி ஓகே வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விக்னேஷ் சிவன் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது.

ஏகே 62 படத்திலிருந்து விலக்கப்பட்டதாக கூறப்படும் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து, அண்மையில் ஒரு விளக்கம் வந்தது. அஜித்திடம் விக்னேஷ் சிவன் கதை சொன்ன நிலையில், படத்தின் பட்ஜெட் மற்றும் கதை பிரம்மாண்டமாக இருந்ததால் இப்படத்தை ஏகே 62 படத்திற்கு பின்பு பண்ணலாம் என்றும் ஏகே 62 படம் இந்தாண்டு தீபாவளிக்குள் ரிலீசாக வேண்டும் என்பதால் விக்னேஷ் சிவனின் கதைக்கு அஜித்தால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

Also Read: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. அஜித் படத்தில் விலகியதைப் பற்றி பெரிய கதையாக உருட்டும் விக்னேஷ் சிவன்

மேலும் ஏகே63 படத்தில் விக்னேஷ் சிவன் இணைவார் என்றும் அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனிடையே அஜித்தின் துணிவு படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் தற்போது ஏகே62 படத்தையும் அந்நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படி அஜித்தின் தொடர் படங்களை வாங்கியுள்ளதாக நெட்பிலிக்ஸ் போட்ட ட்விட்டிற்கு விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார்.

இவரது இந்த லைக் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஏகே62 படத்தில் இல்லாதா விக்னேஷ் சிவன் எதற்காக லைக் போட்டுள்ளார் என்றும், ஒருவேளை விக்னேஷ் சிவனின் கதையை அஜித் ஓகே பண்ணிட்டாரா என்றும் பல கேள்விகள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் லைக்கா நிறுவனம் தான் வாயை திறக்க வேண்டும் என கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: தலைவர் சொன்னதால் அஜித் நடிக்க இருக்கும் பாட்ஷா-2.. உறுதிப்படுத்திய ஹெச். வினோத்

Trending News