வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரம்மாண்ட நிறுவனம் உருவாக்கிய 5 முதல்வர்கள்.. ஜெயலலிதாவுடன் முடிந்ததை விஜய் தொடுவாரா.!

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்திருந்தாலும் விஜய்க்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் தனி மவுஸ் இருக்கிறது. இவரது படங்கள் வெற்றியோ தோல்வியோ அதைக் கொண்டாடுவதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அத்துடன் பாக்ஸ் ஆபிஸில் கிங் ஆகவும் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று இவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இவருக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்றாலும் இவருடைய ரசிகர்களுக்காகவே வரலாம் என்று முடிவு எடுத்த நிலையில் தற்போது நடித்து வரும் படங்களில் அதை மையமாக வைத்து நடிக்க ஆரம்பித்து விட்டார். அதற்கு காரணம் சினிமாவில் இவருக்கு முன்னோடியாக இருந்த நட்சத்திரங்கள் தான். இவர்கள் இல்லை என்றால் சினிமாவும் இல்லை அரசியலும் இல்லை என்ற சொல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

Also read: தளபதி காட்டும் நெருக்கத்தால் தலை கால் புரியாமல் ஆடும் அட்லீ.. சன் பிக்சர்ஸை கதிகலங்க வைக்கும் சம்பளம்

அப்படிப்பட்டவர்கள் தான் அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா, என்டிஆர். இதில் அண்ணா மற்றும் கருணாநிதி தமிழ்நாட்டின் சினிமாவிற்கு முதல் பாடல், முதல் பின்னணி பாடல், பின்னணி பாடகர் மற்றும் டப்பிங் என அனைத்துமே முதன் முதலாக கொண்டு வந்தார்கள். மேலும் எம் ஜி ஆர், ஜெயலலிதா, என் டி ஆர் இவர்கள் மூன்று பேரும் சினிமாவிற்கு நடிப்பின் மூதாதையாக இருந்தவர்கள். இவர்கள் ஐந்து பேரும் சினிமாவில் கால் பதித்த பிறகு தான் முதல்வர்களாக ஆகி நாட்டையே ஆண்டார்கள்.

அதற்கு பாலமாக இருந்தது ஒரு பிரம்மாண்ட நிறுவனம் என்றே சொல்லலாம். அந்த நிறுவனம் இல்லையென்றால் தமிழகத்தில் தமிழ் சினிமாவை இருந்திருக்குமா என்று சந்தேகம் தான். அப்படிப்பட்ட நிறுவனம் தான் ஏவிஎம் நிறுவனம். நான்கு தலைமுறைகளாக சினிமாவில் படங்களை தயாரித்து வருகிறார்கள். இதுவரை 175 படங்கள் எடுத்துள்ளனர்.

Also read: ஜெயலலிதாவை கழட்டி விட்ட எம்ஜிஆர்.. பிரிவுக்கு காரணமாக இருந்த இரண்டு நடிகைகள்

இவர்களை மிஞ்சும் அளவிற்கு இந்தியாவில் வேறு யாரும் இல்லை. இப்படி ஏவிஎம் நிறுவனத்தின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் விஜய்யும் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வேட்டைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து விஜய்யும் அரசியலுக்கு வர இருக்கிறார்.

அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு மாதிரி விஜய்க்கும் கிடைக்குமா. அந்த ஐந்து நட்சத்திரங்கள் முதல்வர்கள் ஆனதற்கு ஏவிஎம் நிறுவனம் தான் காரணமாக இருந்திருக்கிறது. இந்த நிறுவனம் இல்லையென்றால் அவர்களும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தான் அவர்களை ஏவிஎம் நிறுவனம் வளர்த்து விட்டிருக்கிறது. அதேபோல் விஜய்யும் அரசியலை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு வருகிறார்.

Also read: தளபதியிடம் கெஞ்சி கேட்ட மாஸ்டர் மகேந்திரன்.. ரசிகனுக்காக செவி சாய்ப்பாரா விஜய்?

Trending News