ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

விஜய் அரசியலில் ஜெயிப்பாரா? இல்லையா? பிரபல இயக்குனர் பதில்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி பிரபல இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் வருகை

விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து, அதன் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். விஜயின் அரசியல் வருகையால் திராவிட கட்சிகள் பதற்றத்தில் உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தவெகவை இதுவரை எதுவும் விமர்சிக்கவில்லை.

அதேபோல், விஜயும் தனது அரசியல் வருகைக்கு பின், அவர் இதுவரை சமூக வலைதளம் மூலமே அறிக்கைகள் பதிவிட்டு வருகிறார். இணைய தளம் மூலம் அக்கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அண்மையில் ஒரு அரசியல் விமர்சகர் விஜயின் தவெக கட்சியில்தான் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், இது திமுக, அதிமுக, பாஜகவை விட அதிகம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜய் வரும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கவும் முதல்வர் பதவியைப் பிடிக்கவும் தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசான தி கோட் படத்தில் கூட விஜய் வரும் காரில் சி.எம் என்று இருந்தது. இதை நெட்டிசன்கள் கிண்டலடித்தாலும், இதற்கான முயற்சியில் களத்தில் இறங்கி மக்கள் போராட்டத்தில் பங்கேற்று, ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். விஜய்யை ஆட்சியில் அமர வைக்க அவருடன் சிலர் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜயின் மாநாடு வரும் அக்டோபர் 28 ஆம் நடக்கவுள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களை மாநாட்டிற்கு வரவழைத்து பிரமாண்டமான முறையில் நடத்தி, மற்ற கட்சிகளுக்கு இணையான மாநாடாக இது இருக்க வேண்டும் என உழைத்து வருகிறார். அதேபோல் சினிமாத்துறையினரும் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாவும், இம்மாநாட்டில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் பாண்டியராஜ் கருத்து

இந்த நிலையில், மெரினா, ஈஸ்வரன், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான பூஜை திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்தது. அப்போது இப்படத்தைப் பற்றிப் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகை பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தளபதி அடுத்து அரசியலுக்கு வந்துள்ளார். அண்ணன் விஜய்க்கு வாழ்த்துகள். அவர் அரசியலில் ஜெயிக்க வாழ்த்துகள். அவர் அரசியலில் ஜெயிப்பார் என்று தெரிவித்துள்ளார். விஜயின் அரசியல் வருகை எப்போது என தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அதில் ஜெயிப்பாரா? இல்லையா? என்று பலரும் விவாதித்துக் கொண்டிருக்க. விஜய்க்கு ஆதரவும், அவர் ஜெயிப்பார் என்ற பாசிட்டிவான கருத்துகளே அதிகம் பரவி வருவது தவெகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pandiaraj

- Advertisement -spot_img

Trending News