விஷால் இப்பொழுது லத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஷூட் செய்யும்போது விஷாலுக்கு எதிர்பாராத விதமாக அடிபட்டு படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. அதன் பிறகு இப்போது சில கால இடைவெளியில் படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தில் இன்னும் சில வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கின்றது அதனால் கூடிய விரைவில் இந்த படத்தை திரையில் பார்க்கலாம் என்று பட குழுவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு இப்போது ஒரு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது இந்த படத்தை நடிகர் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் இருவரும் விஷாலுக்கு நெருங்கிய நண்பர்கள். நடிகர் சங்க தேர்தலின் போது கூட இவர்கள் விஷாலுக்கு பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் இவர்கள் தற்போது ராணா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அதன் மூலம் விஷாலை வைத்து லத்தி படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் வேலை செய்த டெக்னீசியன்களுக்கு சம்பள பாக்கி இருக்கிறதாம்.
அந்த சம்பள பணத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. டெக்னீசியன்களும் அவர்களிடம் கேட்டு கேட்டு பார்த்து அலுத்து போய் இருக்கின்றனர். இதனால் இந்த பஞ்சாயத்து தற்போது விஷாலிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராக விஷால் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரிடம் வந்துள்ள இந்த பஞ்சாயத்தை அவர் எப்படி தீர்த்து வைப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏனென்றால் சினிமா தொழிலாளர்கள் நலனுக்காக எதையும் செய்வேன் என்று விஷால் அடிக்கடி கூறுவார். அதனால் அவர் இந்த விஷயத்தில் தனது நண்பர்கள் என்றும் பாராமல் டெக்னீசியன்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.