சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பிரபல ஹீரோவின் நிலைக்கு தள்ளப்படுவாரா யாஷ்?.. பிரம்மாண்ட ஹீரோக்களை உசுப்பேத்தும் தயாரிப்பாளர்கள்

கன்னட நடிகராக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வந்த யாஷ், கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதன் மூலம் அவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.

பல கோடி வசூல் லாபம் பார்த்த இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தற்போது மிகப்பெரிய இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இதுகுறித்து கேஜிஎஃப் திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதாவது மிகப் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள யாஷ் இனி கன்னட நடிகரோ, தென்னிந்திய நடிகரோ கிடையாது.

அவரால் இனிமேல் சிறிய அளவு பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க முடியாது பான் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே இனி நடிப்பார். அந்த அளவுக்கு அவருக்கான மவுசு அதிகரித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அவரை அணுக முடியாது என்று தெரிகிறது.

இதேபோன்று தான் நடிகர் பிரபாசையும் பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கொண்டாடி வந்தனர். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரமாண்ட திரைப்படமான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபாஸ் உலக அளவில் பிரபல நடிகராக உருவெடுத்தார்.

அதன்பிறகு அவரை தேடி பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமே வந்தது. அவர் இனிமேல் பிரம்மாண்ட திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பார் என்று சுற்றி இருந்தவர்கள் உசுப்பேத்தி விட்ட காரணத்தால் அவரும் அதே போன்ற கதைகளை தேர்ந்தெடுத்தார்.

கிட்டத்தட்ட பாகுபலி திரைப்படம் வெளிவந்து இந்த ஐந்து ஆண்டுகளில் பிரபாஸ் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதன் மூலம் பிரம்மாண்ட திரைப்படங்களாக இருந்தால் மட்டும் போதாது நல்ல கதையும் முக்கியம் என்று பிரபாஸின் நிலை குறித்து திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது இதே போன்ற ஒரு நிலமை யாஷுக்கு வந்துவிடக்கூடாது என்று அவருடைய ரசிகர்கள் கூறுகின்றனர். அதனால் அவர் இதுபோன்று உசுப்பேத்துபவர்களை பற்றி யோசிக்காமல் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News