வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இறுதிவரை ஜென்டில்மேன் ஆக வாழ்ந்த மனுஷன்.. சரத்பாபுவின் உடலை பார்த்து கதறிய மனைவிகள்

சினிமா என்னும் திரை வானில் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த சரத்பாபு என்ற நட்சத்திரம் தற்போது காற்றில் கலந்துள்ளது. எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவரின் மரணம் திரையுலகினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவருடைய உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த கூட்டமே அதற்கு உதாரணம்.

இவருடைய இழப்பால் வாடும் அவருடைய திரை உலக நண்பர்களும், அவருடன் இணைந்து நடித்த பிரபலங்களும் இவர் குறித்த பல நல்ல விஷயங்களையும் தற்போது பகிர்ந்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவர் ஒரு நல்ல மனுஷனாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அதிலும் அவருடைய இரண்டு மனைவிகளும் அவரின் இறப்பிற்கு வந்து கண்ணீர் சிந்தியது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Also read: சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

அந்த வகையில் சரத் பாபு நடிகை ரமா பிரபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதைத் தொடர்ந்து அவர் நம்பியாரின் மகள் சினேக லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. இருந்தாலும் அவருடைய மனைவிகள் இவரை பற்றி இதுவரை ஒரு தவறான விஷயத்தை கூட பிறரிடம் பகிர்ந்தது கிடையாது. அந்த அளவுக்கு ஜென்டில்மேன் ஆக இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் கூட அவர் தன்னுடைய கடைசி காலத்தை தனிமையில் தான் கழித்திருக்கிறார்.

Also read: யாரும் அறியாத சரத்பாபுவின் மறுபக்கம்.. இரண்டு மனைவிகள் இருந்தும் கிசுகிசுக்கப்படாத ஒரே நடிகர்

அந்த வகையில் அவருடைய கடைசி சகோதரி தான் அவரை கூடவே இருந்து கவனித்து வந்திருக்கிறார். அதை தொடர்ந்து அவருடைய மறைவு செய்தியை கேட்ட முதல் மனைவி ரமா பிரபா உடனே ஓடோடி வந்து சரத்பாபுவின் உடலை கண்ணீருடன் பார்த்துவிட்டு சென்றார். அதேபோல் அவருடைய இரண்டாவது மனைவியும், மகனும் கூட இறுதி வரை இருந்தார்கள்.

மேலும் அவருடைய மகன் வசித்து வரும் சென்னை, தி.நகர் வீட்டில் தான் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அவருடைய இறுதி சடங்கும் நல்ல முறையில் நடைபெற்றது. தற்பொழுது இவர்கள் இரண்டு மனைவிகள் பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இருக்கும் பொழுது வராத இவர்கள், இறுதி அஞ்சலியில் வந்து கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம் என்ற கருத்துகளும் இப்போது எழுந்துள்ளது.

Also read: 80’ஸ் முதல் தற்போது வரை சரத்பாபுவின் புகைப்படங்கள்.. இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத திரையுலகம்

Trending News