புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குணசேகரன் இல்லாத குறையை தீர்க்க வரும் பொம்பள ரவுடி.. எவ்வளவு முடியுமோ உருட்டுங்க நாங்க வெயிட் பண்றோம்

Ethirneechal Serial: அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்பதற்கு ஏற்ப குணசேகரன் இல்லாததால் அந்த இடத்திற்கு போய் நாம் எல்லோரையும் ஆட்டி படைக்கலாம் என்று வருகிறார் பொம்பள ரவுடி ஜான்சி ராணி. சும்மாவே ஓவரா வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டம் போடுவார். இப்ப குணசேகரன் வேற இல்ல, சொல்லவா செய்யணும்.

காலில் சலங்கை கட்டி விட்டது போல் ஆட்டம் ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. ஆனாலும் நந்தினி மற்றும் ரேணுகா,  ஜான்சி ராணியை எப்படியாவது வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று போராடினார்கள். ஆனால் எதுக்குமே அசராமல் ஜான்சி ராணி இங்கே தான் நான் இருப்பேன் உங்களை எல்லாம் அடக்குவேன்.

Also read: குணசேகரன் கேரக்டரை வள்ளலாக மாத்தி குளோஸ் செய்த எதிர்நீச்சல்.. மருமகள்களை ஆட்டிப் படைக்க வரும் அண்ணன்

எங்க அண்ணன் போனதற்கு நீங்க எல்லோரும் தான் காரணம். அதனால் உங்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் என்று திமிராக பேசிக்கொண்டு இருக்கிறார். அப்பொழுது வீட்டிற்கு வந்த குணசேகரனின் அம்மா, ஜான்சி ராணி இங்கே இருந்துட்டு போட்டும் என்று சொல்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியில் அந்த வீட்டில் உள்ள பெண்கள் அமைதியாகி விட்டார்கள்.

அத்துடன் குணசேகரன் இருக்கும் அறையிலேயே நான் தங்கிக் கொள்கிறேன் என்று கரிகாலனை கூட்டிட்டு போகிறார். ஆக மொத்தத்தில் குணசேகரனிடம் இருந்து அந்த வீட்டில் உள்ள பெண்கள் தப்பித்தாலும் இந்த பொம்பள ரவுடி ஜான்சிராணி இடம் மாட்டிக் கொண்டார்கள். மேலும் அப்பத்தா இதெல்லாம் குணசேகரனின் திருவிளையாடலில் ஒன்றுதான்.

Also read: குணசேகரன் லெட்டர் எல்லாம் எழுதி வச்சிட்டு போற ஆளா.. கண்ணீரில் தத்தளிக்கும் எதிர்நீச்சல் குடும்பம்

இனிதான் அவருடைய ஆட்டம் மிக பயங்கரமாக இருக்கும். அதனால் நாம் அனைவரும் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும். அதற்குள் ஜனனி உன்னுடைய பிசினஸை வெற்றிகரமாக ஆரம்பித்துவிடு. இல்லையென்றால் அதுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அப்பத்தா கூறுகிறார்.

எப்படியாவது குணசேகரன் இல்லாத இடத்தை வேறொரு விதமாக விறுவிறுப்பான கதையை வைத்து உருட்ட வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு வகை தான் இந்த ஜான்சி ராணி. ஏனென்றால் குணசேகரனுக்கு அடுத்தபடியாக ஜான்சி ராணிக்கு தான் மக்களிடம் இருந்து வரவேற்பு இருக்கிறது. அதனால் இவரை வைத்து கொஞ்ச நாள் உருட்டலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு அவர்களுக்கு கை கொடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: வேல ராமமூர்த்திக்கு ஆப்பு அடித்த எதிர்நீச்சல் இயக்குனர்.. குணசேகரன் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்

Trending News