புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

அட.. ச்சைக்.. மலையாளம் படம் பார்த்து சகிக்க முடியாமல் வாந்தி எடுத்த பெண்

மலையாள படங்கள் என்றாலே Feel Good படங்களாக தான் இருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடையே உண்டு. அதே நேரத்தில், தேவை இல்லாத மசாலாக்கல், Commercial elements எதுவும் இருக்காது. இதனாலயே மலையாள சினிமா உலக தரத்தில் இருக்கும். இந்த நிலையில், சமீபத்தில் வந்த மார்கோ என்ற படம் கில் போன்ற படங்களை விட உச்சபட்ச வன்முறை காட்சிகளோடு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மார்கோ படம், ஒரு pure genre based படமாக உள்ளது. இந்த படத்தில் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க நடிகராக இருக்கும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு சூரி, சசி குமார் நடிப்பில் உருவான கருடன் படத்திலும் நடித்திருக்கிறார். அந்த படம் மூலம் இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் உருவானார்கள்.

இவர் கடந்த வருடம் மாலிகப்புறம் எனும் படத்தில் நடித்து அதிக வசூலை குவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வருடமும் அசால்டாக 100 கோடியை தொட்டு விடுவார் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மார்கோ படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதால், படத்துக்கு A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். இந்த நிலையில், படத்தை பார்க்க பெண்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. அப்படி இருக்க படத்தை பார்க்க சென்ற ஒரு பெண், தனது அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகியும் வருகிறது.

அந்த பெண் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்ததில் இருந்தே, மிகவும் அசௌகரியமாக உணர ஆரம்பித்திருக்கிறார். இந்த படத்தை போல கொடூரமான சண்டை காட்சிகளோ, வன்முறை காட்சிகளோ, வேறு எந்த படத்திலும் இருந்திருக்க முடியாது. ஆங்கில படமான கில், அனிமல் போன்ற படங்களை விட அதிகமான வன்முறை உள்ளதாம்.

ஒரு கட்டத்தில், இந்த படத்தில் வந்த சண்டை காட்சிகளில் வன்முறையின் உச்சமாக இருந்தபோது, அருவருத்து பக்கத்தில் இருந்த பெண், இவர் பக்கம் திரும்பி வாந்தி எடுத்துவிட்டார்களாம். அந்த அளவுக்கு மோசமாக Disturbing காட்சிகளை கொண்டுள்ளது.

இதை தொடர்ந்து, உலக சினிமா ரசிகர்கள், மேலும் வன்முறை காட்சிகள் இருக்கும் படங்களை ரசிக்கும் ரசிகர்கள், இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு, வருகை தருகிறார்கள். மேலும் உன்னி முகுந்தன் கேரியரில் இந்த படம் பெஸ்ட் பிலிம்-ஆக இருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.

Trending News