சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இந்த விளையாட்டுக்கு நான் வரல.. மூன்றெழுத்து நடிகருக்கு கும்பிடு போட்ட ஹீரோ

Gossip: சில தோல்விகளுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்து தன்னை நிரூபித்த அந்த மூன்றெழுத்து ஹீரோ பிரம்மாண்ட படத்திற்காக பல பயிற்சிகளை செய்தார். பட அறிவிப்பு வெளிவந்து பல மாதங்கள் கடந்த நிலையில் தான் போஸ்டரே வெளியானது.

இதற்கு காரணம் தயாரிப்பாளரான வேர்ல்ட் ஹீரோ டிவி நடிகரை வைத்து படம் எடுப்பதில் பிஸியாக இருந்தார். தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் மூன்றெழுத்து ஹீரோவின் படம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது பார்த்தால் வேர்ல்ட் ஹீரோ அந்த முடிவிலிருந்து பின்வாங்கி விட்டாராம். ஏனென்றால் சமீபத்தில் வெளியான பெரிய படங்கள் எல்லாம் வசூலில் கையை சுட்டுக் கொண்டது. அதனால் சொந்த காசை இழக்க நடிகர் விரும்பவில்லை.

சத்தம் இல்லாமல் எஸ்கேப் ஆன நடிகர்

இது ஒரு காரணம் என்றாலும் படத்திற்கான பட்ஜெட் ஆரம்பத்தில் போட்டதை விட இப்போது அதிகரித்து விட்டதாம். அதனாலேயே நடிகர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். மூன்றெழுத்து ஹீரோவும் இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

மேலும் நானே பணத்தை போட்டு படம் எடுக்கிறேன் என இயக்குனருக்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம். உண்மையில் வேறு ஒரு பெரும் புள்ளி பணத்தை முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கிறாராம்.

அதனால் தான் நடிகர் இவ்வளவு நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால் நடிகரின் படங்கள் பெரிய அளவில் இதுவரை வசூல் சாதனை செய்தது கிடையாது. தேவையில்லாமல் அவர் ரெஸ்ட் எடுக்கிறாரோ என திரையுலக வட்டாரத்தில் இப்போது சலசலக்கப்பட்டு வருகிறது.

ஆழம் தெரியாமல் காலை விடும் ஹீரோ

Trending News