வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

புர்ஜ் கலீஃபாவின் உயரத்தை முந்த வரும் புதிய கட்டிடம்.. எங்கு, எத்தனை கோடி செலவில் தெரியுமா?

உலகின் மிக உயர்ந்த கட்டிடம் சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் சுவாரஸ்ய தகவல்களைப் பற்றிப் பார்ப்போம்.

உலகின் பல பகுதிகளிலும் உள்ள கட்டிடங்கள் எல்லாம் அந்த நாட்டின், அங்குள்ள இடத்தை அடையாளப் படுத்தி வருவதுடன், மிக முக்கியமான சுற்றுலாத்தளமாகவும் அறியப்படுகிறது. அதன் மூலம் அந்த நாட்டில் வருமானமும், அந்நியச் செலாவணியும் அதிகரிக்கிறது.

அதன்படி, அமெரிக்காவில் இருந்த உயர்ந்த கட்டிடமான டுவின் டவர்ஸ் உலகின் ஆச்சர்யங்களில் ஒன்றாக இருந்த நிலையில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகளின் தாக்குதலால் விமானம் மோதி அது தகர்க்கப்பட்டது.இதையடுத்து அமெரிக்காவின் உயர்ந்த கட்டிடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங் உள்ளது.

புர்ஜ் கலீபா

அதன்பின், உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக ஐக்கிய அரபு நாடான துபாயில் புர்ஜ் கலீபா அறியப்படுகிறது. கீழிருந்து அந்த உச்சிக்குச் சென்றால் வானைத் தொடுவது போன்ற உணர்வை அளிப்பதாக அங்குச் சென்ற பலரும் கூறியிருக்கின்றனர். உலகின் முக்கிய சம்பவங்கள், சினிமா, நட்சத்திரங்கள் புகைப்படங்கள், படங்கள் பெயர்கள் இக்கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்படும்.

இன்று துபாயில் மிக முக்கிய சுற்றுலாத்தளமாகவும், உலகின் உயர்ந்த கட்டிடம் என்ற பெருமைக்குச் சொந்தமாகியுள்ள புர்ஜ் கலிபாவுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், சவூதி அரேபியாவில் இதைவிட உயரமான கட்டிடம் ஒன்றை கட்டப்போவதாகத் தகவல் வெளியாகிறது.

உலகின் பிரத்தி பெற்ற உயர்ந்த கட்டிடங்கள், அமெரிக்கா, அரேபிய நாடுகள், சீனா, உள்ளிட்ட நாடுகளில் காணப்பட்டாலும்,50 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் பிரமாண்ட கட்டிடத்தை கட்ட சவூதி அரேபியா தயாராகி வருகிறது. இது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டிலும் 20 மடங்கு பெரியது என கூறப்படுகிறது.

உலகின் உயர்ந்த கட்டிடம்

சவூதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய கட்டிடத்தைக் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு ’தி முகாப்’ என பெயரிட்டுள்ளனர். இக்கட்டிடம் கனசதுரம் வடிவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் உயரம் 400 மீட்டர் இருக்கும் என கூறப்படும் நிலையில், இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் இதுதான் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கென சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் 2 மில்லியன் சதுர மீட்டர்கள் தள பரப்பளவில் இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புர்ஜ் கலீபாவைவிட நவீன வசதிகளும், இதிலேயே சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வணிக தளங்கள், வியாபாரக் கடைகள், நிகழ்ச்சி நடத்தும் அரங்குகள், பெரிய நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியவை உள்ளடக்கிய பிரமாண்ட கட்டிடமாக தி முகாப் கட்டிடம் இருக்கும் என தெரிகிறது.

தற்போது சவூதி அரேபியாவில் ரியல் எஸ்டேட் பிசினஸ் அதிகரித்துள்ள நிலையில், ரியாத்தில் நியூ முராபா என்ற பெயரில் நவீன அம்சங்களை உள்ளடக்கிய ஒரு நகரம் உருவாகி வருகிறது. அதன் மத்தியில்தான் இந்த இக்கட்டிடம் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ஒரு லட்சம் கோடிக்கும் அதிமான மதிப்பில் ’ தி முகாப்’ கட்டிடம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News