வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிராங்ஸ்டர் ராகுல்.. ரோபோ சங்கர் போல் எடுத்த தவறான முடிவு

இப்போது ரசிகர்கள் பெரிதும் கையில் உள்ள போன்கள் மூலம் யூடியூப் பார்ப்பதை தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் பொது இடத்தில் பொதுமக்கள் இடையே பிராங்க் செய்து வீடியோவை வெளியிட்டு வருபவர் பிராங்ஸ்டர் ராகுல். இதுவரை ஆயிரம் கணக்கான வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில் பிராங்ஸ்டர் ராகுல் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படத்தில் கூட நடித்து இருந்தார். இப்போது மறக்குமா நெஞ்சம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதாவது விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ரக்சன்.

Also Read : பயில்வான் சொன்னது உண்மைதான் போல.. ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து உண்மையை உளறிய போஸ்

இவர் இப்போது கதாநாயகனாக மறக்குமா நெஞ்சம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி தீனா, பிராங்ஸ்டர் ராகுல் ரக்சனுக்கு நண்பர்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற வீடியோ பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பிராங்ஸ்டர் ராகுல் அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து போய் உள்ளார்.

இதே போல் தான் ரோபோ சங்கர் சமீபத்தில் மிகவும் மெலிந்து போய் காணப்பட்டார். அதாவது ஒரு படத்திற்காக உடல் எடை குறைக்க சொன்னதால் அதிகப்படியான எடையை குறைத்திருந்தார். இதனால் இப்போது ரோபோ சங்கருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.

Also Read : நிக்க கூட தெம்பில்லாத ரோபோ சங்கர்.. உண்மையை உடைத்த பிரபலம்

அதுமட்டுமின்றி அவருக்கு உடல் ரீதியாக பிரச்சனை இருப்பதாகவும் புரளி கிளம்பியது. இதனால் அவரது ரசிகர்களும் கவலை உற்றனர். ரோபோ சங்கர் போல இயக்குனரின் அறிவுறுத்தல் படி ராகுலும் உடல் எடையை குறைத்து தவறான முடிவு எடுத்துள்ளதாக ரசிகர்கள் வருகிறார்கள்.

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிராங்ஸ்டர் ராகுல்

prankster-rahul
prankster-rahul

Also Read : எலும்பும், தோலுமாய் மாறிய ரோபோ சங்கர், காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த மனைவி!

Trending News