கார்த்தி நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்ற திரைப்படம் சுல்தான். தமிழ் ரசிகர்களின் பெரும்பாலான கருத்துக்களாக இருந்தது சுல்தான் படம் பக்கா தெலுங்கு கமர்சியல் படம் போல் இருக்கிறது என்பதுதான்.
இருந்தாலும் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் என்ற கேட்டகிரியில் இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இதற்கான நன்றி விழா கூட சமீபத்தில் நடைபெற்றது.
தற்போது வரை சுல்தான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட முப்பது கோடி வசூல் செய்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது சுல்தான் திரைப்படம்.
மேலும் சுல்தான் படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. அதில் கார்த்தியின் பாதுகாவலராக வரும் கடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜியான்ட் சஞ்சீர்.
இவர் உலக அளவில் பிரபலமாக இருக்கும் WWE வீரர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. சுல்தான் படத்தில் இவரது கள்ளங்கபடம் இல்லாத கதாபாத்திரம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் வரவேற்பு கிடைத்ததா இல்லையா என்பது தெரியாது. ஆனால் ஜியான்ட் சஞ்சீர் என்பவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.