வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பாக்யாவின் பெட்ரூமிற்குள் வந்த எக்ஸ் புருஷன்.. பீறிக்கிட்டு வந்த ஆசை!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு பாக்யா குடும்பப் பொறுப்புகளை எல்லாம் தூக்கி சுமக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபியை பாக்யாதான் வீட்டைவிட்டு வெளியேற்றினார் எனக் குடும்பமே அவர் மீது கோபமாக இருக்கிறது.

இருப்பினும் கோபி செய்த துரோகத்தை சகித்துக் கொள்ள முடியாமல்தான் பாக்யா அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். இருந்தபோதும் பெட்ரூமுக்கு சென்ற பாக்யா, அங்கு கோபி படுத்திருப்பது போன்றே தெரிகிறது.

Also Read : 2ம் திருமணத்திற்கு நாள் குறிக்க துடிக்கும் ராதிகா.. வெறியான பாக்யா!

என்ன தன் கணவர் தவறு செய்தாலும் அடிமனதில் பாக்யாத்திற்கு கோபி தங்களுடன் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். ஆனால் 50 வயதில் ஓவர் ஆட்டம்போடும் கோபி, வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஹோட்டலில் தங்கி, ராதிகா தன்னை எப்போது வீட்டுக்குள் சேர்த்துக் கொள்வார் என ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ராதிகாவின் அண்ணன் மற்றும் அம்மா இருவரும் கோபியுடன் எப்படியாவது ராதிகாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதைப்பற்றி ராதிகாவின் அண்ணன் கோபியிடம் பேசுகிறார்.

Also Read : கையும் களவுமாக மாட்டிய ஆதி.. சரவணன் செய்த வேலையால் காரித்துப்பிய குடும்பம்

‘கரும்பு தின்னக் கூலியா’ என ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்கு அம்புட்டு ஆவலாய் கோபி இருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் கூடிய விரைவில் கோபி-ராதிகா இருவரின் திருமணமும் நடக்கப்போகிறது.

ஆனால் பாக்யா இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோபியை தலைமுழுகிய பிறகு அவரைப் பற்றி சிந்திக்கக் கூடாது என எண்ணி, தன்னுடைய கேட்டரிங் தொழிலை விரிவுப்படுத்தி, விரைவில் தொழிலதிபராக மாறப் போகிறார்.

இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியலில் முன்பு இருந்த விறுவிறுப்பு குறைவாக இருப்பதால், டிஆர்பி-யில் மட்டுமல்ல ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை பாக்யா-ராதிகா இருவருக்கும் இனி வரும் நாட்களில் காரசாரமான சக்களத்தி சண்டை ஏற்படுத்தினால், சீரியல் ரசிகர்களும் இதை விரும்பிப் பார்க்க வாய்த்திருக்கிறது.

Also Read : நயன்தாரா கெட்டப்பை அசிங்கப்படுத்திய விஜய் டிவி.. உருவ கேலியால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்

Trending News