ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மருமகனை ஹீரோவாக்க அஜீத் ஹிட் பட இயக்குனரை வளைத்துப் போட்ட சேவியர் பிரிட்டோ.. பணம் பத்தும் செய்யும்!

விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தன்னுடைய மருமகனை வைத்து ஹீரோவாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அதற்கு தல அஜித்துக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை தேர்வு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன,

தளபதி விஜய்யின் ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களை தயாரித்த சேவியர் பிரிட்டோ கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் எனும் படத்தை கொடுத்தார். மாஸ்டர் படமும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சிரமமான சூழலிலும் மாஸ்டர் படம் பெரிய வசூலை குவித்துள்ளது அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளதாம். மாஸ்டர் படத்தின் மூலம் கவனிக்கப்படும் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ள எக்ஸ்பி பிலிம் ஃபேக்டரி நிறுவனர் சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தனது மருமகன் ஆகாஷ் என்பவரை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார்.

akash-xavier-family
akash-xavier-family

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை அஜீத்தின் ஆரம்பம் பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

vishnuwardan-cinemapettai
vishnuwardan-cinemapettai

ஆகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அதர்வாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் சேவியர் பிரிட்டோ மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் கூடுதல் தகவல்.

மருமகனுக்கு ஹீரோ ஆசை உள்ளதை அறிந்து கொண்ட மாமனார் சேவியர் பிரிட்டோ எப்பயாவது தமிழ் சினிமாவில் ஆகாஷை ஒரு குறிப்பிடப்படும் கதாநாயகனாக மாற்றிவிட வேண்டும் என ஆரம்பமே அமர்க்களமாக தொடங்க உள்ளார்.

Trending News