தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தற்போது தன்னுடைய மருமகனை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம்.
பல்வேறு பஞ்சாயத்துக்களில் சிக்கி தவிக்கிறது மாஸ்டர் படம். முதலில் சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படத்தை தயாரிப்பதாக இருந்த நிலையில் பின்னர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் கூட்டு சேர்ந்தார்.
முதலில் ஏப்ரல் 14ம் தேதி 2020 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்யப்பட்ட மாஸ்டர் படம் அடுத்த 8 மாதங்களில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை சந்தித்து பொங்கலுக்குத்தான் ஒருவழியாக ரிலீஸ் ஆனது. தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை சுவைத்தது மாஸ்டர் படம்.
அதன் மூலம் மாஸ்டர் படத்தை தயாரித்த எக்ஸ்பி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் விஜய்யின் செல்வாக்கை பயன்படுத்தி தன்னுடைய மருமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் என்பவரை விரைவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளாராம்.
இதற்காக விஜய்சேதுபதிக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சீனுராமசாமி என்ற இயக்குனரிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம் சேவியர் பிரிட்டோ. சமீபத்தில் சேவியர் பிரிட்டோ மகளுக்கும் அதர்வாவின் தம்பிக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷுக்கு சினிமாவில் மிகப் பெரிய ஆர்வம் இருப்பதால் எப்படியாவது தன்னுடைய மருமகனை மிகப் பெரிய ஹீரோவாக ஆக்கிவிட வேண்டும் என முதல் பாய்ச்சலே தரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சேவியர் பிரிட்டோ.