ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

குணசேகரனின் தங்கைக்கு அடைக்கலம் கொடுத்த எக்ஸ் காதலி.. எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வரும் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: இந்த மாதிரி ஒரு திருப்பத்தை தான் எதிர்பார்த்தோம் என்கிற மாதிரி சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. கதிரை அடித்து காலை உடைத்தது எஸ்கேஆர் தான் என நினைத்து குணசேகரன், தம்பிகள் மற்றும் கரிகாலனை அழைத்துக் கொண்டு எஸ்கேஆர் வீட்டிற்கு வருகிறார்.

அங்கே போனதும் என் தம்பி இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் நீங்கள் தானே என்று ஒத்துக் கொள்ளுங்கள் என குணசேகரன் எஸ்கேஆரிடம் கேட்கிறார். அதற்கு எஸ்கேஆர் என் தம்பி அருண் காலை உடைத்தது நீதான் என்று ஒத்துக்கோ அதுக்கப்புறம் நான் பதில் சொல்றேன் என்கிற மாதிரி பதிலடி கொடுக்கிறார். இந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஆதிரை பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு சாருபாலா வீட்டிற்கு வருகிறார்.

வந்ததும் அருணின் காலை உடைத்தது என்னுடைய அண்ணன் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட கரிகாலன், ஆதிரையிடம் நீ ஏன் இங்க வந்த என்கிற மாதிரி கேட்கிறார். அதற்கு கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் எல்லா கோபத்தையும் கரிகாலன் மீது காட்டும் விதமாக ஆதிரை, கரிகாலன் கன்னத்தில் ஓங்கி அறை விடுகிறார்.

Also read: கதிரை வேட்டை நாயாக நினைத்து அடித்தது குணசேகரன்.. எலக்ஷனில் ஜெயிக்க போட்ட மாஸ்டர் பிளான்

இதனை பார்த்த குணசேகரன் வாயை மூடிக்கொண்டு எதுவும் சொல்லாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார். அடுத்ததாக எஸ்கேஆர், ஆதிரையிடம் உனக்கு இந்த வீட்ல இடம் இல்ல வெளியில போ என்று சொல்கிறார். உடனே சாறு பாலா, ஆதிரை இனிமேல் இங்கேதான் இருக்கப் போகிறாள் என்று எஸ்கேஆர் இடம் சொல்லி விடுகிறார். இதைக் கேட்டதும் ஆதிரை முகத்தில் சந்தோசம் பூத்துக் குலுங்கி விட்டது.

இத்தனை நாளாக வேறு வழியே இல்லாமல் குணசேகரன், கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி கொடுத்த டார்ச்சரை தாங்கிக் கொண்டிருந்த ஆதிரைக்கு தற்போது தான் ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கிறது. இனிமேல் தான் இந்த நாடகம் சூடு பிடிக்க போகிறதே என்பதற்கு ஏற்ப பல எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வந்து பார்ப்பவர்களின் மனதை குளிர வைத்திருக்கிறது.

ஏற்கனவே குணசேகரனுக்கு எதிராக ஈஸ்வரி எலக்ஷனில் நிற்கப் போகிறேன் என்று சொன்னதிலிருந்து தோற்றுவிடுவோமோ என்கிற பயம் வந்துவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரனின் அல்ல கையாக இருந்த கதிரும் தற்போது படுத்த படுக்கையாக போய்விட்டார். அடுத்து குணசேகரனுக்கு எதிராக ஆதிரைக்கு அடைக்கலம் கொடுத்து விட்டார் சாருபாலா. இனி இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விஷயங்களையும் குணசேகரன் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.

Also read: பாக்யாவின் கேன்டியனுக்கு புதிதாக வந்த பிரச்சனை.. ரணகளத்திலும் குதூகலமாக ஆட்டம் போடும் கோபி அங்கிள்

Trending News