வெங்கடாகிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். பல வருடங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் ஒரு வழியாக இன்று வெளியாகி இருக்கிறது. இப்போது படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தின் மைய கருத்து என்னவென்றால் இலங்கையில் நடந்த ஈழப் போராட்டத்தால் அகதியாகப்பட்ட விஜய் சேதுபதி தனக்கான அடையாளத்தை தேடிக்கொண்டாரா என்பது தான் படத்தின் கதை. படத்தின் தொடக்கமே ஈழப் போராட்டமாக தொடர்கிறது.
இதனால் அகதியாக்கப்பட்ட விஜய் சேதுபதி தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு புனிதன் என்று கொடைக்கானலில் சென்று வாழ்கிறார். அங்கு தான் கதாநாயகி மேகா ஆகாஷை சந்திக்கிறார். விஜய் சேதுபதிக்கு இசை மீது உள்ள ஆர்வத்தால் அதை கற்றுக் கொள்கிறார்.
லண்டனில் உள்ள இசையரங்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் விஜய் சேதுபதியின் கனவாக இருக்கிறது. இதற்காக பல பிரச்சனைகளை சந்தித்து கலந்து கொள்கிறார். கடைசியில் விஜய் சேதுபதி புனிதன் இல்லை அகதி கிருபாநிதி என்கிறது தெரிய வருகிறது.
Also Read : நேருக்கு நேராக விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய் ஆண்டனி.. உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்ட படம்
மேலும் விஜய் சேதுபதிக்கு திறமை இருந்தும் அகதி என்று முத்திரை குத்தப்பட்டதால் நிகழ்ச்சியில் இவரை அங்கீகரிக்க தயங்குகிறார்கள். கடைசியில் அந்த மேடையில் விஜய் சேதுபதிக்கு அடையாளம் கிடைத்ததா என்பதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர். இயக்குனர் சொல்ல வந்த விஷயம் மக்களுக்கு தெளிவாக புரிகிறது.
மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஆனால் படத்திற்கு தேவையில்லாத சில விஷயங்களை இயக்குனர் புகுத்தி உள்ளார். அவற்றை தவிர்த்து இருந்தால் படத்திற்கு இன்னும் நல்ல ரேட்டிங் கிடைத்திருக்கும். விஜய் சேதுபதி தனக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நிறைவு செய்துள்ளார்.