வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தோழி இறந்தது கூட தெரியாத யாஷிகா.. 2வது ஆபரேஷன் குறித்து தந்தை அளித்த பகீர் தகவல்!

மகாபலிபுரம் பார்ட்டிக்கு சென்று, பின் சென்னை திரும்பிய யாஷிகா ஆனந்த் கோர விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

யாஷிகா ஆனந்த் துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதையடுத்து அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

இந்த நிலையில் யாஷிகா இரண்டு நாட்கள் முன்னர் நள்ளிரவில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியதும் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அவரது கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

Yashika-CinemapettI.jpg
Yashika-CinemapettI.jpg

இதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகா மற்றும் அவருடன் பயணித்த 3 நண்பர்கள் அருகில் இருப்பவர்களின் உதவியால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தோழி இறந்த சம்பவம் தற்போது வரை தெரியாது என்று யாஷிகாவின் அம்மா தெரிவித்துள்ளார். யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, கை, கால் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாஷிகாவிற்கு ஏற்கனவே வலது காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இன்று இரண்டாவது அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அவரது தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆறு மாத காலங்கள் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

Trending News