புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

60 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டிய கேஜிஎஃப் நடிகர் யாஷ்.. ஒரே படம் ஓகோன்னு வாழ்க்கை

கன்னட சினிமாவை இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் யாஷ். அதுவரை கன்னட சினிமாவை அனைவரும் கேலி கிண்டல் தான் செய்து கொண்டிருந்தனர்.

அவர்களும் அந்த அளவுக்குத்தான் படங்களும் எடுத்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக கன்னட சினிமாவில் வெளியாகும் படங்களின் கதைகளும் திரைக்கதையும் வேறு லெவலில் அமைந்து வருகிறது.

அதிலும் பிரசாந்த் நீல் மற்றும் யாஷ் கூட்டணியில் வெளியான கே ஜி எஃப் திரைப்படத்தின் வெற்றி இருவருக்கும் மிகப்பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது pan-india ஹீரோவாகவும் மாறிவிட்டார் யாஷ்.

yash-cinemapettai
yash-cinemapettai

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இந்தியாவே வெயிட் பண்ணுறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த படமும் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறுகின்றனர்.

தற்போது கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ள யாஷ் சமீபத்தில் கிட்டத்தட்ட 60 கோடி மதிப்பிலான புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த புதுமனை புகுவிழா புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

yash-new-house
yash-new-house

எந்த சினிமாவை கேலி கிண்டல் செய்தார்களோ அதே சினிமாவை தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு செய்துவிட்டார் என யாஷை கன்னட ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

Trending News