சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குடிபோதையில் தோழியின் உயிரை பறித்தாரா யாஷிகா.? நாடித்துடிப்பு இருந்தும் விட்டு சென்ற நண்பர்கள்!

விஜய் டிவியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா. இரண்டு நாட்களுக்கு முன்பு கொடூர விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பாண்டிச்சேரியில் இருந்து ஈசிஆர் வழியாக சென்னை வரும் வழியில் யாஷிகாவின் விலையுயர்ந்த டாடா கார் சுக்குநூறாக நொறுங்கியது நாம் பார்த்தோம்.

இவ்வளவு பெரிய விபத்து நடப்பதற்கான காரணத்தை நேரில் பார்த்த நபர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். இரவு 11 மணி அளவில் 120 க்கும் மேல் கிலோமீட்டர் ஸ்பீடில் வேகம் பிடித்து வெறி கொண்டு வந்துள்ள, அந்த கார் தடுப்பு சுவரில் மோதி உருண்டு சென்று இடது புறம் உள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி விழுந்துள்ளது.

காரில் வந்த அனைவருமே மது அருந்தி இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் யாஷிகாவின் தோழி காரின் மேல் பகுதியில் உள்ள சன் ரூப் வழியாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று வந்துள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி உருண்டு உள்ளது.

அதில் தான் யாஷிகாவின் தோழி தூக்கி எறியப்பட்டு உயிருக்காக போராடி உள்ளார். இந்த நிலையில் பின்னாடி இரண்டு கார்களில் வந்த யாஷிகாவின் நண்பர்கள் விபத்தில் சிக்கிய மூன்று பேரை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர் . அதாவது செலிபிரிட்டி என்பதால் வெளியே தெரிய வேண்டாம் என்பது மட்டுமே அவர்கள் மனதில் இருந்துள்ளது.

yashika anand friend valli shetty bhavani
yashika anand friend valli shetty bhavani

இதனால் யாஷிகாவின் தோழியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கூட அவர்கள் இல்லை என்பதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தோழிக்கு நாடித்துடிப்பு இருந்ததாக அங்கு வந்த மருத்துவர் ஒருவர் தெரிவிக்க ஆனால் ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால் உயிர் பிரிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்த தவறை மறைக்க வேண்டும் என்பதை மட்டுமே அவர்கள் மனதில் இருந்து உள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தோழியை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தாள் ஒருவேளை அவர் உயிர் தப்பி இருக்கலாம் என்றும் புலம்புகின்றனர் விபத்தை நேரில் பார்த்தவர்கள்.

Yashika-Cinemapettai
Yashika-Cinemapettai

இப்படி இருக்க இந்த முறை மட்டுமல்ல இது போன்ற நுங்கம்பாக்கத்தில் ஒரு விபத்தை ஏற்படுத்தி உள்ளார் யாஷிகா. குடிபோதையில் காரை ஓட்டி தனது தோழியை உயிரை பறித்த யாஷிகாவின் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது லைசென்ஸ் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Trending News