சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உன் மரணத்தினால் சாகும் வரை குற்ற உணர்ச்சி இருக்கும்.. பிரபல நடிகை உருக்கமான பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த் இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன தற்போது இவரது நடிப்பில் ராஜபீமா படம் உருவாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூலை புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் போது மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நாளை தன் பிறந்தநாள் என்பதால் யாரும் தன்னை வாழ்த்த வேண்டாம் என இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி தனது தோழி இறந்தது குறித்து மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

yashika anand
yashika anand

அவர் கூறியதாவது, “தற்போதைய நிலைமையை வெளிப்படுத்த இயலவில்லை. என்றும் எப்போதும் குற்ற உணர்வு நீங்காது. இந்த, கோர விபத்தில் இருந்து என் உயிரை காத்த கடவுளுக்கு நன்றி செல்வதா? அல்லது என் சிறந்த தோழியை பறித்ததற்காக வாழ்நாள் முழுவதும் பழிப்பதா?” என கூறியுள்ளார்.

மேலும், “பவானி என்னை மன்னிக்க மாட்டாள். பவானியின் குடும்பத்தை இத்தகைய கடின சூழலுக்கு தள்ளியதற்கு மன்னிப்பு கூறுகிறேன். பவானியின் குடும்பம் ஒருநாள் என்னை மன்னிக்கும். எப்பொழுதும் பவானியின் நினைவுடன் வாடுவேன்” என்றும் யாஷிகா தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.

என்னதான் யாஷிகா மீது தவறு இருந்தாலும், இழப்பு என்பது அனைவருக்கும் ஒன்று தான். தன் தோழியை இழந்து வாடும் யாஷிகாவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News