சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குடிபோதையில் கார் ஓட்டினாரா யாஷிகா ஆனந்த்.? 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை!

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியான துருவங்கள் 16 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இருப்பினும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தான் யாஷிகா ஆனந்த் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

அதன்பிறகு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றால் இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகளை காட்சிகளுடன் வெறுப்பை சம்பாதித்து கொடுத்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் யாஷிகா ஆனந்த் அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு முனிவர் நோட்டா, கழுகு 2 ,ஜாம்பி ஆகிய படங்களில் நடித்திருந்தார் இருப்பினும் இந்த பழங்களிலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

ஆனால் யாஷிகா ஆனந்த் தொலைக்காட்சிகளில் கவனம் செலுத்தி ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டுசிங்கம் என்னும் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக பங்கேற்றார்.

Yashika Aannand
Yashika Aannand

யாஷிகா ஆனந்த் அவரது நண்பர்களுடன் மாமல்லபுரம் பகுதி அருகே உள்ள சூளேரிகாடு பகுதியில் வேகமாக சென்றுள்ளார். மேலும் குடிபோதையில் கார் ஓட்டினாரா என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. அப்போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி யாஷிகா ஆனந்த் நெருங்கிய தோழி வள்ளி செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்பு யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாஷிகா ஆனந்த் வேகமாக கார் ஓட்டியது மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்தியது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரவு பார்ட்டி முடிந்தபின் சென்னை திரும்பியுள்ள யாஷிகாவின் நண்பர்கள் குடிபோதையில் இருந்தார்களா என்பது போன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக தண்டனை நிச்சயம் என்று யாஷிகாவின் ரசிகர்கள் சற்று பதட்டத்தில் உள்ளனர்.

Trending News