தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவர்ச்சியான படங்கள் நடித்து வருபவர் யாஷிகா ஆனந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திலுமே இவருக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்கள்தான் கொடுக்கப்படும். மேலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது நண்பர்களுடன் காரில் சென்ற யாஷிகா ஆனந்த் விபத்தாகி 4 மாதங்களாக படுத்த படுக்கையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு இவரால் தொடர்ந்து படங்கள் நடிக்க முடியாததால் இவர் நடிக்க வேண்டிய பட வாய்ப்புகளை பறிபோயின.

சமீபத்தில் இவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பற்றி வெளிப்படையாக கூறினார் அதில் தனது நண்பர்களுடன் விலகிச் சென்ற போது ஏற்பட்ட விபத்தை பற்றி கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது யாஷிகா ஆனந்த் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் மது அருந்துவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் யாஷிகா ஆனந்த் தனது சேட்டையை ஆரம்பித்து விட்டார் எனக் கூறி வருகின்றனர். அதாவது தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது யாஷிகா ஆனந்த் மது அருந்திவிட்டு சென்றுதான் விபத்து ஏற்பட்டதாக பலரும் கூறினர்.

இதனை முழுவதுமாக யாஷிகா ஆனந்த் மறுத்தார். ஆனால் தற்போது மீண்டும் மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டார் யாஷிகா ஆனந்த். ஆனால் உஷாராக அதனை ரெட் புல் என்று சொல்லிவிட்டார். இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு என எல்லாம் கிண்டல் செய்து வருகின்றனர். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.