வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மீண்டும் பார்ட்டிகளில் கும்மாளம் போடும் யாஷிகா.. இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தல

தமிழில் பல திரைப்படங்களில் கவர்ச்சி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

அந்த வகையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களை கவர்வதற்காகவே இவர் அனைவரையும் உறைய வைக்கும் அளவுக்கு கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்பிய அவர் மிகப் பெரிய விபத்தை சந்திக்க நேர்ந்தது. அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட யாஷிகா பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு வழியாக தேறி வந்தார்.

ஆனால் அந்த விபத்தில் யாஷிகாவின் உயிர்த்தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த இழப்பு அவரை வாழ்நாள் வரை குற்றவுணர்ச்சியில் வைத்திருப்பதாக அவர் ஒரு பேட்டியில் கூறி கண் கலங்கினார்.

அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வந்தாலும், குடிபோதையால் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவரை பலரும் விமர்சித்தனர். அதையெல்லாம் கடந்து வந்த அவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் மீண்டும் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது சமீபகாலமாக யாஷிகா மீண்டும் நள்ளிரவுப் பார்ட்டி, பப் போன்ற இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வளவு பட்டும் திருந்தலையா என்று அவரை விமர்சித்து பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இந்த முறை யாஷிகா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம். அதனால் அவர் தன் நண்பர்களைக் கூட நம்பாமல் நல்ல ஒரு டிரைவரை கார் ஓட்டுவதற்காக எப்போதும் கூடவே அழைத்துச் செல்கிறார் என்ற ஒரு தகவல் தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Trending News