வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

யாஷிகா உங்க பில்டப் நல்லா தான் இருக்கு.. அடுத்த படம் ஓடுமா என்று தெரியலையே.!

தமிழ் சினிமாவில் வெளியான அடல்ட் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இளம் நடிகை தான் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த நிலையில் திடீரென பெரும் விபத்தில் சிக்கினார் யாஷிகா.

இந்த விபத்தில் உடன் பயணித்த தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க யாஷிகா மட்டும் படு காயங்களுடன் உயிர் பிழைத்தார். பல மாதங்கள் மருத்துவமனை பெட்டில் வாழ்க்கையை கழித்த யாஷிகா தற்போது தான் குணமாகி நடமாட தொடங்கியுள்ளார். இந்நிலையில் அவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மறுபிறவி எடுத்து வந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான ஆர் 23 கிரிமினல்’ஸ் டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் குறும்பட நடிகர் ஆதி சுந்தரேஸ்வரன், ஜெகா, ராகேஷ் சேது ஆகிய மூவரும் நாயகர்களாகவும், யாஷிகா ஆனந்த், குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கவுதம் ராகவேந்திரா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “இப்படத்தின் டைட்டில் மட்டுமல்ல, திரைக்கதையும் இதுவரை வந்திராத புதுமையானதாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. படம் பார்ப்பவர்கள் ஒரு நிமிடத்தை தவற விட்டாலும் அவர்களுக்கு படத்தின் கதை புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மிஸ் பண்ணாமல் பார்த்தால் தான் இதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன என்பது புரியும். இந்த படம் யாஷிகாவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

இவங்க குடுக்கிற பில்டப் எல்லாம் பார்த்தா படம் எப்படி இருக்கும்னு ஒரு யூகமா கணிக்க முடியுது. இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பில்டப் தான் என்கிறார்கள் நெட்டிசன்கள். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்துக்கே இவ்ளோ பில்டப் குடுக்க மாட்டாங்க யாஷிகா படத்துக்கு ஏன் இவ்ளோ பில்டப்பு. படம் வெளியாகறதுக்கு முன்னாடியே இந்த பேச்சா கொஞ்சம் அடக்கி வாசிங்க பாஸ் என சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

Trending News