வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நீதிமன்றத்தில் பல மணி நேரம் காத்திருந்த யாஷிகா.. பிடி வாரண்ட்டால் பதறி அடித்து ஓடி வந்த சம்பவம்

மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் யாஷிகா ஓட்டிச்சென்ற கார், மாமல்லபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவனி உயிரிழந்தார். இந்த விபத்தில் அதிவேகமாக ஓட்டி வந்த யாஷிகாவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தது.

Also Read: தியேட்டரில் முகம் சுழிக்க வைத்த 5 அடல்ட் படங்கள்.. சீரழிந்து சின்னாபின்னமாகும் சினிமா

ஆனால் யாஷிகா ஆஜராக வேண்டிய நேரத்தில் எல்லாம் நீதிமன்றத்திற்கு வருகை தராமல் டிம்கி கொடுத்ததால் இந்த வழக்கை மார்ச் மாதம் 21 ஆம் தேதி விசாரணை செய்த நீதிபதி, யாஷிகா நேரில் ஆஜராகாததை தொடர்ந்து பிடி வாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

ஒருவேளை யாஷிகா மட்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதன்பின் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த யாஷிகா இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

Also Read: சனியன தூக்கி பனியன்ல போட்டுக் கொள்ளும் யாஷிகா.. பழைய கதை மறந்து போச்சா அம்மணி!

இதனை அடுத்து இன்று செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ரீகால் மனு அளித்திருந்த யாஷிகா ஆனந்த், நேரில் ஆஜராகி அந்த அலுவலகத்திற்கு முன்பு பல மணி நேரமாக காத்துக் கிடந்தார். மேலும் பிடி வாரண்டில் இருந்து தப்பிப்பதற்காகவே யாஷிகா ஆனந்த் தரப்பிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணு

ம்’ என்பது போல் கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிம்கி கொடுத்த யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் உத்தரவிட்டு தற்போது ஆஜர்ப்படுத்தி இருப்பது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

Also Read: விபத்தில் சிக்கியும் திருந்தாத யாஷிகா.. நீதிமன்றத்திற்கே டேக்கா கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம்

Trending News