வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கார்த்தியின் பையா படத்தில் நடித்துள்ள யோகி பாபு.. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நடித்த புகைப்படம்

தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபு ஒரு சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் கிடைத்த சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜிம் பாய், சீரியல் ஆக்டர், காமெடி நடிகர்களில் ஒருவர் என மாறி மாறி நடித்து வந்த யோகிபாபுவுக்கு கடந்த சில வருடங்களாகத்தான் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து தற்போது நம்பர்-1 காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

யோகி பாபு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். அடிப்படையில் ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவரான யோகி பாபு சினிமாவில் சாதிக்க வேண்டும் என மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்துள்ளார்.

அப்படிப்பட்ட யோகி பாபு, கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா படத்தில் நடித்துள்ளதை பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள். அதில் சண்டைக் காட்சியில் வரும் ஜிம் பாய்ஸ்களில் ஒருவராக நடித்துள்ளார்.

yogi-babu-acted-in-paiya-movie
yogi-babu-acted-in-paiya-movie

2010ஆம் ஆண்டு வெளிவந்த பையா திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இன்றுவரை தினமும் பையா படத்திலிருந்து குறைந்தது ஒரு பாடலாவது கேட்காத ரசிகர்களே கிடையாது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News