புதன்கிழமை, ஜனவரி 1, 2025

இவர்களைப் போல் நடிக்க வேண்டும்.. தனது தீராத ஆசையை வெளிப்படுத்தி யோகிபாபு

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா ஆந்தாலஜி படத்தில் நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், அரவிந்த் சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன், ரதீந்திரன் பிரசாத், வஸந்த் சாய் ஆகியோர் இயக்குநர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகர் யோகிபாபுவும் ஒரு பாகத்தில் நடித்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சியில் நகைச்சுவையை வெளிப்படுத்தும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகர் யோகி பாபு நாகேஷ் மற்றும் கவுண்டமணியைப் போல் நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், “நகைச்சுவை நடிகனாக மட்டும் அல்லாமல் பல்வேறு குணங்களையும் வெளிப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை என கூறிய யோகி பாபு, “கவுண்டமணி நடிப்பில் வெளிவந்த ஒன்னா இருக்க கத்துக்கணும், நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம், நீர் குமிழி போன்ற படங்களில் நகைச்சுவையை தாண்டி உணர்வுகளை இருவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

yogi-babu-01
yogi-babu-01

நவரசா வெளியான பின் எனக்கான கதாப்பாத்திரங்கள் என்னை தேடிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறியுள்ளார். ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் இப்படம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைக்கலைஞர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது என்பதால், இதில் நடித்தவர்கள் யாரும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News