வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பா ரஞ்சித் படத்தில் ஹீரோவாக யோகிபாபு.. வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அனைத்து நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் நடிகர் யோகிபாபு. இவரை படத்தில் நடிக்க வைப்பதற்கு என்று ஒரு தனி கூட்டம் சினிமா வட்டாரத்தில் சுற்றி வருகிறது என்று தான் கூற வேண்டும்.

இவரை ஹீரோவாக நடித்த கூர்க்கா மற்றும் ஜாம்பி திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானாலும் ஓரளவுக்குத்தான் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது.

என்ன இருந்தாலும் சினிமா வட்டாரத்திலிருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் யோகிபாபுவை ஹீரோவாக வைத்து படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

yogi babu
yogi babu

தற்போது அட்டகத்தி, கபாலி, காலா போன்ற மாபெரும் படங்களை இயக்கிய பா ரஞ்சித் கதாநாயகனாக யோகிபாபுவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு பொம்மை நாயகி என பெயர் வைத்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்த படம் யோகி பாபு திரை வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News