வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புலியை பார்த்து பூனை சூடு போட்ட கத.. கமலுக்கு போட்டி நாதான்னு வரிஞ்சு கட்டிய யோகி பாபு

Kamal-YogiBabu: படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக எல்லா கதாபாத்திரமும் ஏற்று நடத்திட முடியாது. அவ்வாறு இருக்க தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் யோகி பாபு கமலை பார்த்து ஏற்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.

தற்போது காமெடி நடிகர்களுக்கு டிமாண்ட் இருக்கும் நிலையில், யோகி பாபு காட்டில் மழை பெய்வது போல தான் இருந்து வருகிறது. தற்பொழுது புது அவதாரம் எடுத்து வரும் இவர் சுமார் 20 படங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். மாற்றி மாற்றி எந்த படத்தையும் விடாமல் அனைத்திலும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

Also Read: பணத்தாசையால் படுக்கையை பகிர்ந்த நடிகை.. கடைசியில் உயிர் போன பரிதாபம்

எப்படி தான் படப்பிடிப்பை சமாளிக்கிறாரோ என்று வியக்கும் அளவிற்கு இவரின் அதிவேக பயணம் நடைபெற்று வருகிறது. மேலும் தன் எதார்த்தமான நடிப்பாலும், லொள்ளு பேச்சாலும் மக்களிடையே எதிர்பார்ப்பை உண்டுபடுத்தி வருகிறார்.

அவ்வாறு இருக்க, தற்பொழுது அவ்வை சண்முகி கதாபாத்திரம் போல் புது அவதாரம் ஏற்று நடித்து வருகிறாராம். நடிப்பில் கமலுக்கு போட்டி நான் தான் என கூறும் விதமாய் இவரின் இத்தகைய வேடம் பேசப்படுகிறது. மேலும் படத்திற்கு ஈர்க்கக்கூடிய மிஸ் மேகி என்ற பெயரில் பெண் வேடம் ஏற்று நடக்கிறாராம்.

Also Read: மாமன்னன் பட ஹீரோ உதயநிதியா, பகத் பாசிலா.? பாவம் மாரி செல்வராஜே கன்பியூஸ் ஆயிட்டாரு

ட்ரம் ஸ்டிக் தயாரிப்பில் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் உருவாகும் படம் தான் மிஸ் மேஜிக். மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி யோகி பாபுவின் லுக், வேற லெவலில் பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு, தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் கமலுக்கு போட்டியா என பலரால் பேசப்பட்டு வருகிறார்.

இது எப்படி இருக்கு என்றால், புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாய், தற்போது இவர் ஏற்கும் இத்தகைய நடிப்பு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆண்டவருக்கு நிகராய் இவர் ஏற்கும் கதாபாத்திரம் வெற்றியடைய இவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: மார்க்கெட் இல்லை என்றாலும் தூக்கிவிட நினைக்கும் வெங்கட்பிரபு.. விஜய்யின் உடன்பிறப்பாக நடிக்கப் போகும் ஹீரோ

Trending News