வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பாலிவுட் நடிகையை கவர்ந்த யோகிபாபு.. அண்ணாச்சிக்கு ஜோடினா சும்மாவா!

நகைச்சுவை நடிகர்களில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற தொடரில் சிறு வேடங்களில் நடித்து அதன் மூலமாக தனது திரைப் பயணத்தை தொடர்ந்தார்.

ராணுவ வீரரின் மகன் ஆன யோகிபாபு காஷ்மீரில் தனது பள்ளி படிப்பை முடித்தார். மேலும் இவர் நடிப்பதற்கு முன்பு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். பல போராட்டங்களுக்குப் பிறகே நடிப்பு துறையில் வந்துள்ளார்.

பிரபல இயக்குனரும் ,நடிகருமான அமீர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த “யோகி” என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் பாபு .திரைப்படத்தில் நடித்ததன் பின்னரே பாபு என்ற தனது பெயரை “யோகிபாபு” என்று மாற்றிக் கொண்டார்.

yogi babu
yogi babu

பல திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். பின்பு “மான்கராத்தே “என்ற திரைப்படத்தில் “வவ்வால்” கதாபாத்திரம் மூலமாக ரசிகர்களிடையே பிரபலம். அதைத் தொடர்ந்து “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் “பன்னி மூஞ்சி வாயா” என்ற கதாபாத்திரமும் பிரபலமானது. தன்னுடைய உருவத்தை பற்றி இகழ்ந்த திரையுலகில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தவர்.

அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஒருசிலரை படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்போது சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இரண்டு இயக்குனர்களை வைத்து இயங்கி வரும் இத்திரைப்படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை யோகிபாபு மிகவும் விமர்சையாக தனது படக்குழுவினருடன் கொண்டாடினார்.

இதில் யோகாவிற்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக திரைப்படத்தில் நடிக்கும் நடிகை ஊர்வசி ரவுண்ட்ஏலா 45 கிலோ கேக்கை யோகிபாபுகாக பிரத்யேகமாக ஆர்டர் செய்து பரிசளித்துள்ளார் இதன் மதிப்பு ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது. தனது பிறந்தநாளை பல பிரபலங்களுடன் வெகுவிமர்சையாக யோகிபாபு கொண்டாடியது வைரலாகி வருகிறது.

Trending News