வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கழட்டிவிட்ட சந்தானம்.. கைப்பிடித்து தூக்கிவிடும் யோகி பாபு

தமிழ் சினிமாவில் தன்னுடைய நான் ஸ்டாப் காமெடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு, சபாபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானத்தை வைத்து பாரிஸ் ஜெயராஜ், ஏ1 போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஜான்சன். அந்த இரு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் சந்தானம் இப்போது அவரை கண்டு கொள்வதே இல்லையாம்.

அதனால் அந்த இயக்குனர் தற்போது யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க தயாராகிவிட்டார். சமீபகாலமாக யோகி பாபு நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் காமெடி கலந்து உருவாகி வரும் அந்த படத்திற்கு மெடிக்கல் மிராக்கிள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் யோகி பாபு ஓலா கார் ஓட்டும் டிரைவராக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சீரியல் நடிகை தர்ஷா குப்தா, மன்சூர் அலிகான், மதுரை முத்து உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தில் யோகிபாபுவின் சாகசங்கள் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவரின் நடிப்பில் வெளிவந்த கூர்கா திரைப்படத்தில் யோகி பாபு தீவிரவாதியிடம் மாட்டிக்கொண்ட பொது மக்களை காப்பாற்றும் கேரக்டரில் நடித்திருப்பார்.

அதே போன்று இந்த படத்திலும் அவருடைய நடிப்பு ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜான்சன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரிக்க இருக்கிறார். மேலும் சந்தானம் இவரை கழட்டி விட்ட படியால் தற்போது யோகி பாபு வைத்து விட்டதை பிடிக்கும் முயற்சியிலும் அவர் இப்போது இறங்கி இருக்கிறார்.

Trending News