தமிழ்சினிமாவில் காமெடி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு. ஆரம்ப காலத்தில் இவரது திரை வாழ்க்கையில் பல சறுக்கல்கள் சந்தித்தாலும், சமீப காலமாக இவரது படங்கள் வெற்றி பெற்று இவரது புகழ் கோபுரத்தின் உச்சத்திற்கு சென்று விட்டது என்று தான் கூற வேண்டும்.
நடிகர் யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருந்தாலும், சினிமா ரசிகர்களை பெரிய அளவில் திருப்தி படுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். அதுமட்டுமில்லாமல் யோகி பாபு நடிப்பு இப்படத்தில் பெரிய அளவிற்கு பேசப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் கூட பா ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது.
தற்போது யோகிபாபு கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் வழிபட சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் பெரிதளவு இவரை கவனிக்காததால் அடுத்தடுத்த சன்னதிகளில் உள்ள கடவுளை வழிபட்டு வந்துள்ளார்.
முழுமையாக கடவுளை வழிபட்டு பின்பு கோவிலை விட்டு வெளியேறிய போது கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் பூக்கடை மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யோகிபாபு டன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர்.
யோகி பாபு கோவிலுக்கு வந்த செய்தி திடீரென அடங்காத காட்டு தீ போல் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய தொடங்கியது. பின்பு அதிகமான ரசிகர்கள் யோகி பாபு காண நெருங்கியதால். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் யோகிபாபு திடீரென காரில் ஏறி சென்றுள்ளார்.
தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.