திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இதுதாண்டா லக்-க்கு.. ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகிபாபு

திருச்சியை பூர்விகமாக கொண்டவர் டெல். கே.கணேசன். இவர் இந்தியாவில், குறிப்பாக தமிழ் திரையுலகின் உள்ள மாணிக்கங்களை உலகிற்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைபவர். இவர் ஹாலிவுட் படங்களையும் தயாரித்து, ஒரு மிகப்பெரிய ஆளுமையாக வளர்த்துள்ளார்.

இவர் ஏற்கனவே ஹாலிவுட்-க்கு நெப்போலியன், ஜி.வி. பிரகாஷ் போன்றவர்களை அறிமுகம் செய்திருந்தார். நடிகர் நெப்போலியனை, டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ் படம் மூலம் அறிமுகம் செய்தார். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரையும், தன்னுடைய படங்களுக்கு இசையமைக்க வைத்து ஹோலிவுட்டில் அறிமுகம் செய்தார்.

அடுத்தது யோகிபாபு..

இந்த நிலையில், இவர்களை தொடர்ந்து, நடிகர் யோகி பாபுவையும் ஹாலிவுட் க்கு அறிமுகம் செய்யவிருக்கிறார் டெல்.கே.கணேசன். அவரது அடுத்த படைப்பான ட்ரோப் சிட்டியில் யோகி பாபு நடிக்க போகிறார். இதில் வரும் ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனை போல யோகி பாபு டான்ஸ் ஆடப்போகிறாராம்.

யோகி பாபு நகைச்சுவை நட்சத்திரமாக தமிழில் வளம் வரும் நிலையில், அடுத்தது யூனிவேர்சல் காமெடியன் ஆக உருவாக போகிறார். தற்போது தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க, யோகி பாபு ரெட்டின் கிங்ஸ்லி தவிர வேறு யாரும் இல்லை.

ஒரு காலத்தில் காமெடியில் கலக்கிய சந்தானம், சூரி, சதீஷ் என்று எல்லோரும் ஹீரோவாக மாறி, சிறப்பான படங்களையும் தந்து வருகிறார்கள். இந்த நிலையில், தனக்கான டிமாண்டை சரியான நேரத்தில் உருவாக்கி, அதை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் யோகி பாபு

Trending News