யோகி பாபு சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு போட்டியாக தற்சமயம் தமிழில் காமெடி பண்ணுவதற்கு யாருமே இல்லை. கைவசம் பத்து முதல் 12 படங்கள் வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் சராசரியாக ஆண்டுக்கு 8 முதல் 10 படங்கள் வெளிவருகிறது. தமிழ் மட்டும் இல்லை இந்தி வரை இப்பொழுது இவர் கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது.
யோகி பாபு மட்டுமே இன்றைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரே காமெடி நடிகர். இதை அவரே தெளிவாக புரிந்து வைத்துள்ளார். சந்தானம் முதல் சூரி வரை அனைவரும் இப்பொழுது ஹீரோவாக மாறிவிட்டனர். இவர்களுக்கு காம்பெடிஷன் கொடுக்கும் அளவிற்கு எந்த காமெடியனும் இன்னும் உருவாகவில்லை.
சமீபகாலமாக யோகி பாபு, வடிவேலுவை மிஞ்சிய பணத்தாசை பிடித்தவராய் வலம் வந்து கொண்டிருக்கிறார். காசுக்காக அளவுக்கு மீறி படத்தை கமிட் செய்கிறார். படம் சூட்டிங் நடக்கும் வேலையில் அந்தப் படத்திற்கு போகாமல், வேறு ஏதாவது பெரிய ஹீரோ படங்கள் வந்தால் அங்கே போய் விடுகிறார்.
நரி போல் வடிவேலுவை மிஞ்சிய மண்டேலா
கேட்பவர்களுக்கு இன்னொரு நாள் கால் சீட் கொடுக்கிறேன் என்றும் பேசி மழுப்புகிறார். தினமும் இப்படியே இவரது கதை ஓடுகிறது. இது ஒரு புறம் இருக்க இவர் நடித்து முடித்த படங்களுக்கு இன்னும் டப்பிங் பேசாமல் இருக்கிறார். ஷூட்டிங்கிற்கு தினமும் ஏதாவது ஒரு படத்திற்கு சென்று விடுகிறாராம்.
வடிவேலு போல் இப்பொழுது யோகி பாபுவிற்கு தின சம்பளம் தான். ஒரு நாள் ஷூட்டிங் இல் பங்கேற்பதற்கு 12 லட்சம் வாங்குகிறார். கொஞ்சம் அப்படி, இப்படி பேரம் பேசி வரும் நெருக்கமானவர்களிடம் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வாங்குகிறாராம். காமெடிக்கு ஆள் இல்லாத காட்டில் நான் தான் ராஜா என பேயாட்டம் போடுகிறார் மண்டேலா
- யோகி பாபுவுக்காக வரிசை கட்டி காத்திருக்கும் 5 படங்கள்
- யோகி பாபு சீனை வெட்டி தூக்கிய அட்லி
- யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த 4 படங்கள்