வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குட் பேட் அக்லி படப்பிடிப்பில் அஜித்துடன் சேர்ந்து போஸ் கொடுத்த யோகி பாபு.. இணையத்தில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்

Ajith Latest Picture: கடந்த வருடம் வரை அஜித் ரசிகர்களுக்காக பெருசாக எதிலும் இன்ட்ரஸ்ட் எடுத்துக் கொள்ளாமல் படத்தில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் இப்பொழுதெல்லாம் ஆளே வேற மாதிரி என்பதற்கு ஏற்ப அஜித்தின் ரூட்டு மாறிவிட்டது. அந்த வகையில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அஜித், சமீப காலமாக டிசைன் டிசைனாக புகைப்படத்தை வெளியிட்டு சோசியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகிறார்.

அதிலும் விடாமுயற்சி படத்தில் நடித்த பிறகு ரொம்பவே ரிலாக்ஸாக இருக்கிறார் போல, சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பொழுது அங்கே செய்த விஷயங்கள், யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களெல்லாம் சேர்த்து வைத்து போட்டோவை எடுத்து அதை ரசிகர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

அந்த வகையில் வாரம் ஒரு முறை எப்படியாவது அஜித்தின் புகைப்படம் வந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் இப்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருக்கும் பொழுது யோகிபாபு உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ajith latest pic
ajith latest pic

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இவருடன் பிரபு, பிரசன்னா மற்றும் த்ரிஷாவும் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். அத்துடன் அஜித், இதில் மூன்று வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தெரிவித்த நிலையில் விடாமுயற்சி படம் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்தப் படத்தை முதலில் ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறார்கள்.

அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போகிறது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மே மாதங்களில் குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று ஒத்தி வைத்து விட்டார்கள்.

ஆனால் அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மட்டும் மறக்காமல் இணையத்தில் ரிலீஸ் பண்ணி ரகசியங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். ரசிகர்களும் எங்களுக்கு இது போதும் தல என்பதற்கு ஏற்ப லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள்.

Trending News