யோகி பாபுவின் மொத்த சொத்து மதிப்பு.. உண்மைய சொல்லுங்க கலாய்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இதன் பின்னரே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து கூர்கா, மண்டேலா, ஜாம்பி என சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் இவருடைய காமெடி காட்சிகளை மக்கள் மிகவும் வரவேற்றனர். 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது யோகி பாபு வலிமை,  பீஸ்ட்,  அ,யலான், பன்னி குட்டி, சலூன், பொம்மை நாயகி, கடைசி விவசாயி, என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்

ஆரம்பத்தில் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. ஒரு படத்திற்கு தினம் 500 ரூபாய் என்று  சம்பளம் வாங்கிய இவர் இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

அதன்பின் காமெடி டிராக்கில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து, ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி சம்பாதித்து சேர்த்த யோகி பாபுவின் சொத்து மதிப்பு 40 கோடி என்கிறார்கள். ஆனால் 40 கோடி என்பதெல்லாம் அவருக்கு ஒரு பணமே இல்லை, அவரிடம் இன்னும் பல கோடிகள் இருக்குமென யோகி பாபு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்