திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி போட ஆசைப்படும் யோகி பாபு.. வெளியான சூப்பர் அப்டேட்

Actor Yogibabu: இப்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபு தான் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் யோகி பாபுவிற்கு மார்க்கெட் அதிகமாக இருக்கிறது. அதன்படி பாலிவுட்டில் ஜவான் படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார்.

இந்த சூழலில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்திலும் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று நடந்த இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் முக்கிய அப்டேட் ஒன்று யோகி பாபு கொடுத்திருக்கிறார். இது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

Also Read : 40 வருட அனுபவத்தை 30 நிமிடங்களில் காட்டிய சூப்பர் ஸ்டார்.. பற்றி எரிந்த விஜய், ரஜினி மோதல் முடிவுக்கு வந்தது

அதாவது யோகி பாபு மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி போட போகிறார். அதாவது நெல்சன் ஆரம்பத்தில் தன்னுடைய படத்தில் கதாநாயகியை தேடிக் கொண்டிருக்கும்போது விக்னேஷ் சிவனால் நயன்தாராவின் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முழுக்க முழுக்க டார்க் காமெடியாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் எக்கச்சக்க வரவேற்பு கொடுத்திருந்தார்கள்.

இதில் குடும்ப பாரத்தை சுமக்கும் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே நெல்சன் மிகப்பெரிய வெற்றியை கோலமாவு கோகிலா படம் கொடுத்திருந்தது. இப்போது ஆடியோ லான்ச் பங்க்ஷனில் பேசிய யோகி பாபு கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளதாக கூறியிருக்கிறார்.

Also Read : பீஸ்ட் மாதிரி நேரத்தில் கோட்டை விட்ட நெல்சன்.. ஜெயிலர் சென்சருக்கு பின் பயத்தில் ரஜினி

அப்படி என்றால் மீண்டும் நயன்தாரா, யோகி பாபு கூட்டணியில் கோலமாவு கோகிலா 2 படம் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இப்போது நெல்சன் அடுத்ததாக விஜய், ரஜினி என பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார். ஆகையால் மீண்டும் கோலமாவு கோகிலா படத்தை எடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து நெல்சனின் அடுத்த படம் உறுதியாகும். இப்படத்திற்காக இரவு பகல் பாராமல் நெல்சன் முழுமையாக தனது உழைப்பை போட்டு இருக்கிறார். எனவே கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Also Read : ஜெயிலர் டைட்டிலுக்கு வந்த சோதனை.. கொசு தொல்லையால் பெயரை மாற்றும் முயற்சியில் நெல்சன்

Trending News